அஜீத், விஜய் உடன் மோத தயாரா? கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை ! Uruthikol Audio

0
5243

அஜீத், விஜய் உடன் மோத தயாரா? கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை ! Uruthikol Audio | TOC | Mansoor Ali Khan Actor Director Talks About Uruthikol Movie Audio Launch | TOC

அஜீத், விஜய் உடன் மோத தயாரா?
கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ” உறுதி கொள்”
கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது…

கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP. துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச.

தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி காரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை.. ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறு நாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட்.

நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாஆகும் அவர் யோசிக்க வேண்டும்.

இவ்வாறு மன்சூரலிகான் பேசினார்..

இந்த விழாவில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர்..

விழாவுக்கு வந்தவர்களை தயாரிப்பாளர்கள் அய்யப்பன், பழனி, இயக்குனர் அய்யனார் வரவேற்றனர்..
முனீஸ்காந்த், அபிசரவணன், இசையமைப்பாளர் சத்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்…

Uruthikol,Kishore,Megana,Director Iyyanar,Music Director Jude Liniker,Kali Venkat,Jai Sneham films,Mansoor Ali Khan,Actor Mansoor Ali Khan,Daniel Annie Pope,Actor Daniel Annie Pope,Mundasupatti Ramdoss,Venu Arvind,Actor Venu Arvind,Actor Kishore Kishy,Aari,Actor Aari,Music Director Sathya,Uruthikol Audio Launch,Uruthikol Movie,Ramdoss

அஜீத், விஜய் உடன் மோத தயாரா? கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை ! Uruthikol Audio | TOC

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here