ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் திரைப்படம் “ஸ்ரீ சபரி ஐயப்பன்”.

தமிழ் சினிமா வரலாற்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இத் திரைப்படத்தை
நட்பின் நூறாம் நாள் திரைப்பட இயக்குனர் ராஜா தேசிங்கு இயக்குகிறார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறக்கூடிய அளவில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் பெரிதும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிகண்ட சாமிகள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை மாலை அணியும் வில்லியாக சோனாவும் படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகம் ராஜாசாமி மிரட்டி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சாம்ஸ் முத்துக்காளை, ராஜேந்திரநாத், உடுமலை ரவி, மங்கி ரவி, வடிவேலு கணேஷ், விஸ்வ காந்த், லதா, சின்னாளப்பட்டி சுகி, சுமதி, ஸ்வேதா, என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் 6 பாடல்கள் வீரமணி ராஜு, சீர்காழி சிவசிதம்பரம், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, முத்து சிற்பி. இவர்கள் கம்பீர குரலில் பிரம்மாண்டமாக பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது.

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார் ராஜா தேசிங்கு. ஒளிப்பதிவு மகேஷ் மகாதேவன், இசை பாபு அரவிந்த், எடிட்டிங் எஸ்பி அகமது, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், ஆர்ட் டைரக்ஷன் ராஜா தேசிங்கு கவனிக்க படத்தின் படப்பிடிப்பு வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, பொள்ளாச்சி, பாலூர், கரூர், ஆவடி மற்றும் சபரிமலை பகுதிகளில் மிக பிரம்மாண்டமாக அரங்கு அமைத்து படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ராஜா தேசிங்கு இயக்கியுள்ள “ஶ்ரீ சபரி ஐயப்பன்” படம் கார்த்திகை 1’ம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

@GovindarajPro

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here