அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்திமொழி பேசாத மாநிலங்கள்மீது இந்தியைத் திணிக்க முயல்கின்றன. தமிழ்நாட்டில் இதுகுறித்த விழிப்புணர்வு பரவிவருகிறது. தமிழ்நாடு அரசு இந்தித் திணிப்புக்கு எதிராகத் தனித் தீர்மானமே நிறைவேற்றி இருக்கிறது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில், தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்த தமிழ்க் கூட்டமைப்பு இந்தித் திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது.

அக்டோபர் 26 புதன்கிழமை காலை 9மணிக்கு சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நிகழும் இந்தப் போராட்டத்தில் தமிழறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், படைப்பாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பெரும்திரளாகக் கலந்துகொள்கிறார்கள்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெற்றித் தமிழர் பேரவை, வடசென்னைத் தமிழ்ச் சங்கம், தலைநகர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், உலகத் தமிழர் பேரவை, சென்னை முத்தமிழ்ச் சங்கம், உறவுச் சுரங்கம், உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம், வள்ளுவட் மேடை, தொன்மைத் தமிழ்ச் சங்கம், கொளத்தூர் கலை இலக்கிய மன்றம், திருவள்ளூர் பாவேந்தர் இலக்கியப் பேரவை, மாதவரம் திருக்குறள் கழகம், கலந்துரையாடுவோம் குழு, நாளந்தா இலக்கிய நலச் சங்கம், தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை, கவிஓவியா கலை இலக்கிய மன்றம், சமத்துவ இலக்கியக் கழகம், தமிழ்நாடு மாணவர் – இளையோர் கூட்டமைப்பு, இலக்கியச் சோலை, தமிழ்ப்பணி, கவிதை உறவு, தஞ்சைத் தமிழ்த்தாய் அறக்கட்டளை, நிலா வட்டம், பாரதி தமிழ்ச் சங்கம், இலக்கிய வானம், திசைகள் கலை இலக்கிய மன்றம், பொதிகை மின்னல் இலக்கியக் கூடல், சமூக – சட்ட அரசியல் விழிப்புணர்வு அமைப்பு, கவிச்செல்வர் படைப்பகம், திண்டிவனம் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் கலந்துகொள்கின்றன.

அழைப்பே தேவையில்லை; இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கட்டாயக் கடமையென்று கருதித் தமிழர் பெருங்கூட்டம் திரளும் என்று தமிழ்க்கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here