சினிமாவுல நாலே நாலு சீன் வந்து போனாலே போதும்னு நினைச்சுதான் சினிமாவுக்கே வந்தேன். ஒரு சர்வர் ஆகவோ, போஸ்ட்மேன் ஆகவோ, பால்காரனாகவோ நடிச்சாலே போதும் என்கிற ஆசையோட வந்தேன். சென்னைக்கு நான் வந்த முதல் இடம் அமைந்தகரைதான். அங்கே என் தம்பிகள் இருந்தாங்க. அவங்கள தவிர வேற யாரையும் இங்கே எனக்குத் தெரியாது. ஆனால் காலச்சூழலால் 45 படங்கள் நடிச்சிட்டேன். 12 படங்களுக்கு மேல டைரக்ட் பண்ணிட்டேன். உதவி இயக்குநராகவே இராமநாராயணன் சார்கிட்ட 36 படங்கள்ல ஒர்க் பண்ணிட்டேன்.

கங்கை அமரன், இளையராஜா, ராமராஜன்கங்கை அமரன், இளையராஜா, ராமராஜன்
ஆனா ஒரு விஷயம். ஹீரோவா ஐம்பது படங்கள் நடிச்சிடணும்னு நினைச்சிருந்தேன். இடையே ஏற்பட்ட ஒரு விபத்தால, கொஞ்சம் இடைவெளி ஆகிடுச்சு. அதற்குள் நான் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன்னு தவறான தகவலும் பரவிடுச்சு. அப்படி எங்கேயும் எப்பவும் நான் சொன்னதில்ல.

எனக்கு இன்னமும் தாய்க்குலங்கள் ரசிகர்களா இருக்காங்க. அவங்க என்னை குத்தம் சொல்லிடாத வகையில் உள்ள கதாபாத்திரங்கள்ல நடிக்கவே இன்னமும் விரும்புறேன். எத்தனையோ படங்கள் வில்லனாக நடிக்கக் கேட்டும் மறுத்ததுக்கும் அதான் காரணம். 45 வருஷ அனுபவத்தில் வருஷத்துக்கு ஒரு படம் நடிச்சிருக்கேன்னு எண்ணிக்குறேன். என்னைப் பொறுத்தவரை என் கேரியர் திருப்திதான். யுத்தம்னு வரும் போது வெற்றியும் வரும்.. தோல்வியும் வரும். எது வந்தாலும் அதை தாங்கித்தான் போகணும். இன்னொரு விஷயம், அமையறதுதான் அமையும்னு நம்புறேன்.”

”எப்பவுமே ஒரு படத்தை பார்ட்2 எடுக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல. எடுத்தாச்சு. பார்த்தாச்சு. ஓடியாச்சு. அவ்ளோதான் அதை மறுபடியும் தொடக்கூடாது. `கரகாட்டக்காரன்’ படத்துல காமெடி, பாடல்கள், எமோஷனல்னு எல்லாமும் சரிசமமா இருக்கும். கடந்த மூணு வருஷ கொரோனா காலகட்டத்துல எந்த டி.வி. சேனல்லேயும் அந்தப் படத்தை ஒளிப்பரப்பினதா நான் கேள்விபடல. இது பத்தி அண்ணன் கங்கை அமரன்கிட்ட நம்ம கரகாட்டக்காரன்ல ஒரு காமெடி வருமே.. சொப்பனசுந்தரி வச்சிருந்த காரை நாம வச்சிருக்கோம். இப்ப சொப்பன சுந்தரியை யார் வச்சிருக்காங்கனு வர்ற காமெடி போல, இப்ப நம்ம ‘கரகாட்டக்காரன்’ படத்தை யார் வச்சிருக்கா? ஏன் எந்த டி.வி. சேனல்லேயும் மாட்டேங்குது?” கேட்டேன். அந்தப் படத்தை பார்த்தால், அத்தனை பேரும் மனசு விட்டு சிரிப்பாங்க. கொரோனா பயத்துல இருந்தவங்களுக்கு அந்த படம் பயத்தை விரட்டி, முகத்துல சிரிப்பை வரவழைச்சிக்கும் படமா இருந்திருக்கும். அந்த ஆதங்கமும் உண்டு. அந்த பட சாட்டிலைட் ரைட்ஸ் இப்ப யார்கிட்ட இருக்குதுனு எனக்கும் தெரியல. அமரண்ணனும் தெரியல!”

”. தலைவர் எம்.ஜி.ஆர்., ‘வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்’ எனப் பாடினார். அதைப்போல யார் மனசுல நிக்குறாங்க. எந்த பாட்டு மனசுல நிக்குது இதான் முக்கியம்.

அந்த கால கதாநாயகிகள்ல சரோஜாதேவி, சாவித்ரி, கே.ஆர்.விஜயானு எல்லாருமே மனசுல நின்னாங்க. இப்ப அப்படி கீர்த்தி சுரேஷ் நிற்குறாங்க. என்ன காரணம்?! ‘நடிகையர் திலகம்’தான். அதுல அவங்க எப்பேர்ப்பட்ட நடிப்பு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here