Ever since the nationwide lockdown was announced on 23rd March, shoots of fiction and non-fiction shows had come to a complete halt, with due consideration for the safety of the actors and staff. Complying with the directives issued by the Tamil Nadu State government, Zee Tamil has resumed shoots of the fiction shows. The viewers of Zee Tamil can expect original content and hit the resume button on the journeys of their favourite characters from 27th July.
Over the past decade, the viewers of Zee Tamil have evolved with their favourite characters, investing deeply in each of their journeys. The channel, in line with its exemplary commitment towards entertaining its audiences, is set to present novel and original content, taking them further along in the lives of their favourite characters from their beloved shows. As an initiative to spread cheer and positivity among their viewers, Zee Tamil has also launched a digital and on-air comeback campaign with the tagline ‘Idhaythal inaivom, idhaiyum kadapom’– which translates to – if we come together in spirit, this too shall be overcome.
The utmost priority for Zee Tamil as the channel resumes shoot is to ensure the safety of all personnel and actors on set. Several measures have been put in place to ensure the same. A team of safety experts is brought in to sanitize and disinfect the sets, prior to shoots. This is a 9-hour process that is conducted prior to shoot schedule. In its efforts to ensure that every measure is taken to mitigate risks, a government approved team is invited to the sets to conduct a thorough inspection once the sanitization procedure is complete.
Before entering and leaving the set each day, provisions have been made for mandatory thermal screening for all members of the cast and crew. The shoots will strictly be held indoors and in a closed environment with a maximum of 60 persons present at any given time. Safety kits with soaps, sanitizers gloves and masks have been made available to members on the set. When not in front of the camera, actors will mandatorily wear face masks on the set. To further reduce risk factors, the actors will do their own make up in order to avoid unnecessary contact with other members from the crew. Arrangements for food that is cooked in a hygienic environment will also be made available at the sets.
From 27th July, the fiction shows will be airing six days a week in new timings:
Rettai Roja – 1:30 – 2:00 pm
Endrendum Punnagai – 2:oo – 2:30 pm
Raja Magal – 2:30 – 3:00 pm
Neethaane Enthan Ponvasantham – 7:00 – 8:00 pm
Gokulathil Seethai – 8:00 – 8:30 pm
Yaaradi Nee Mohini – 8:30 – 9:00 pm
Sembaruthi – 9:00 – 9:30 pm
Oru Oorula Oru Rajakumari – 9:30 – 10:00 pm
Sathya – 10:00 – 10:30 pm
“During the lockdown, the channel has shown tremendous initiative to come up with innovative and engaging content for its viewers. This has helped establish a continued connect between our viewers and their favourite stars while shoots were on pause. We are thankful to our ardent viewers for their continued support during this time and eagerly look forward to bringing to them original and exciting new content”, said Siju Prabhakaran, South Cluster Head, Zee Entertainment Enterprises, Pvt. Ltd.
During the lockdown, the channel also took the initiative to provide financial aid to nearly 400 daily wage earners from the television industry to address their financial challenges.
ஜீ தமிழ் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குகிறது: ஜூலை 27 முதல் புதிய நிகழ்ச்சிகளை காணுங்கள்
நாடு முழுவதும் மார்ச் 23 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களின் படப்பிடிப்புகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க, ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளது. ஜீ தமிழ் வாடிக்கையாளர்கள் இனி புதிய எபிசோட்களை எதிர்பார்க்கலாம். ஜூலை 27 முதல் தங்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களின் பயணங்களை மீண்டும் தொடர்ந்து கண்டுகளிக்கலாம்.
கடந்த பத்தாண்டுகளில், ஜீ தமிழ் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரங்களுடன் நெருக்கமாகி, அவர்களின் ஒவ்வொரு பயணத்திலும் ஆழமான ஈடுபாட்டை செலுத்தி வந்துள்ளனர். ஜீ தமிழ் சேனல், பார்வையாளர்களை மகிழ்விக்கும் தன்னுடைய முன்மாதிரியான அர்ப்பணிப்புக்கு ஏற்ப, புத்தம் புதிய எபிசோட்களை வழங்க இருக்கிறது. பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த தொடரில் தாங்கள் நேசிக்கும் கதாபாத்திரங்களின் புதிய தருணங்களை பார்த்து மகிழலாம். பார்வையாளர்களிடையே உற்சாகத்தையும் உத்வேகத்தையும் உருவாக்கும் முயற்சியாக, ஜீ தமிழ் ‘இதயத்தால் இணைவோம், இதையும் கடப்போம்’ எனும் ஸ்லோகனுடன் தன் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்குகிறது. இதன் ஸ்லோகனின் பொருள் – நாம் மனதால் ஒன்றிணைந்து, இந்த சூழ்நிலையையும் கடந்து வருவோம் என்பதாகும்.
சேனல் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் அதேசமயம் ஜீ தமிழ் செட்டில் உள்ள அனைத்து பணியாளர்கள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கிறது. இதை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கு முன்னர், செட்களை சுத்தப்படுத்தவும், கிருமி நீக்கம் செய்யவும் பாதுகாப்பு நிபுணர்களின் குழு வரவழைக்கப்படுகிறது. இது படப்பிடிப்புக்கு முன்னால் நடத்தப்படும் 9 மணி நேர செயல்முறையாகும். அபாயங்களை குறைப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, கிருமி நாசினியால் சுத்தம் செய்யும் நடைமுறை முடிந்ததும் முழுமையான ஆய்வு செய்ய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழு ஒன்றும் வரவழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் செட்டில் நுழையும் முன்னாலும், வெளியேறும் முன்னாலும், நடிகர்கள் மற்றும் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டாய தெர்மல் ஸ்கிரீனிங் (வெப்பப் பரிசோதனை) செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் அதிகபட்சமாக 60 நபர்கள் இருக்கும் மூடப்பட்ட சூழலில் உட்புறத்தில் மட்டுமே படப்பிடிப்புகள் நடைபெறும். சோப்புகள், சானிட்டைஸர்கள், கையுறைகள் மற்றும் மாஸ்க்குகள் கொண்ட பாதுகாப்பு கருவிகள் செட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு கிடைக்கின்றன. செட்டில் கேமராவுக்கு முன்னால் இல்லாதபோது, நடிகர்கள் கட்டாயமாக மாஸ்க்குகளை அணிவார்கள். ஆபத்து காரணிகளை மேலும் குறைப்பதற்காக, குழுவினர் மற்றும் மற்ற உறுப்பினர்களுக்கு இடையே தேவையற்ற தொடர்பைத் தவிர்ப்பதற்காக நடிகர்கள் தாங்களே சொந்தமாக அலங்காரம் செய்துகொள்வார்கள். சுகாதாரமான சூழலில் சமைக்கப்பட்ட உணவுக்காகவும் செட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 27 முதல், தொலைக்காட்சி தொடர்கள் வாரத்தின் ஆறு நாட்களிலும் புதிய நேரங்களில் ஒளிபரப்பாகும்:
ரெட்டை ரோஜா – 1:30 – 2:00 pm
என்றென்றும் புன்னகை – 2:00 – 2:30 pm
ராஜா மகள் – 2:30 – 3:00 pm
நீதானே எந்தன் பொன்வசந்தம் – 7:00 – 8:00 pm
கோகுலத்தில் சீதை – 8:00 – 8:30 pm
யாரடி நீ மோகினி – 8:30 – 9:00 pm
செம்பருத்தி – 9:00 – 9:30 pm
ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி – 9:30 – 10:00 pm
சத்யா – 10:00 – 10:30 pm
“ஊரடங்கு உத்தரவின் போது, ஜீ தமிழ் சேனல் அதன் பார்வையாளர்களுக்கு புதுமையான மற்றும் கவரும்படியான நிகழ்ச்சிகளை அளிக்க மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது படப்பிடிப்புகள் இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதும் எங்கள் பார்வையாளர்களுக்கும் அவர்களுக்கு பிடித்த நட்சத்திரங்களுக்கும் இடையே தொடர்ச்சியான இணைப்பை ஏற்படுத்த உதவும். இந்த நேரத்தில் எங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் புத்தம் புதிய மற்றும் அற்புதமான புதிய நிகழ்ச்சிகளை அவர்களுக்கு கொண்டு சேர்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்”, என ஜீ எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான சிஜு பிரபாகரன் கூறினார்.
ஊரடங்கு காலத்தில், தொலைக்காட்சித் துறையை சார்ந்த கிட்டத்தட்ட 400 தினசரி ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு அவர்களின் பொருளாதார சுமையை குறைப்பதற்காக நிதி உதவி வழங்க சேனல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.