மீகாமன், தடம் என தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்துவரும் மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கலையரசன், ஆரவ், நிதி அகர்வால் ஆகியோர் நடிப்பில்
ரெய்ஜெயண்ட் நிறுவன தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் கலகத் தலைவன். ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அரோல் கொரெலி இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு தில்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ட்ரூபேடார் என்ற ஆட்டோமொபைல் நிறுவனம், அதிக மைலேஜ் தரும் வானகம் ஒன்றை ஆறிமுகப்படுத்தவுள்ள நிலையில், அந்த வாகனம் வெளியிடும் புகை அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை உருவாக்கும் என்ற தகவல் அந்நிறுவனத்தின் எதிரி நிறுவனத்துக்கு தெரியவர, அந்தத் தகவல் கசிந்து ட்ரூபேடார் நிறுவனத்தின் பங்குகள் சரிந்து பெரும் நஷ்டத்தை சந்திக்கிறது. இந்த ரகசியம் எப்படி வெளியே கசிந்தது என்று கண்டுபிடிக்க, ட்ரூபேடார் நிறுவத்தின் உரிமையாளர் ஆரவை நியமிக்கிறார்.
ரகசியம் கசிய காரணமாக இருந்த நெட்வொர்க்கில் இருக்கும் ஒவ்வொருவராக, கொடூரமாக கொலை செய்கிறார் ஆரவ். இப்படியே அந்த நெட்வொர்க்கின் முதல் புள்ளியை ஆரவ் அடைந்தாரா, அந்த முதல் புள்ளி யார்?

இந்த கலகத்துக்கும் உதயநிதிக்கும் என்ன தொடர்பு என்பதே கலகத்தலைவன் படத்தின் கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் உதயநிதி, அலட்டல் இல்லாமல் அருமையாக நடித்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கிறது. அதே போல் வில்லனாக நடித்திருக்கும் ஆரவ் மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய காதாபாத்திரமும் மிகவும் சிறப்பாக, பலம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய ரோலில் வரும் கலையரசன், நாயகி நிதி அகர்வால் ஆகியோர் கவனிக்கும்படியாக நடித்திருக்கின்றனர்.

தில்ராஜின் ஒளிப்பதிவு, படத்தின் தன்மைகேற்றவாறு அதிரடியாக இருக்கிறது.  பின்னனி இசை படத்துக்கு வலு சேர்க்கிறது, பாடல்கள் பரவாயில்லை. மகிழ் திருமேனி இப்படத்தில் எடுத்திருக்கும் கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதிது.

மேலும் திரைக்கதை மிகச்சிறப்பு. இடைவேளை காட்சியின் போது தியேட்டர் அதிர்கிறது. மிகச்சிறந்த அதிரடிப்படமாக வெளியாகி இருக்கிறது கலகத்தலைவன்

கலகத் தலைவன் – கலக்கும் தலைவன்

கலகத் தலைவன் திரை விமர்சனம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here