Trailers of 12 movies to be launched at JIFF screened
Historical moment for Tamil and Indian Cinema: Gangai Amaran
Next Torch Campaign to be held in Mumbai on December 1
The third phase of the ‘Torch Campaign’
organised to promote the 15th edition of Jaipur International Festival (JIFF) was held at Prasad Preview Theatre Labs in Chennai.
Music composer, singer, actor, and filmmaker Gangai Amaran attended the significant event as Chief Guest.
Gangai Amaran asserted that this is undoubtedly a historical moment for Indian and Tamil Cinema.
For the first time, a film festival has started working towards building a new image for regional cinema and promoting it worldwide, he further said.
“There are talks all around, but real work is rare. Hanu Roj and Jaipur International Film Festival deserve words of praise for this great attempt, as it will merge North and South. Indian Cinema has started walking on a new path and now I’m realizing the true significance of film festivals”, Amaran opined.
Twelve full-length films in various Indian languages of Indian Panorama will be launched during the 15th edition of Jaipur International Festival ‘JIFF’ to be held from 6 to 10 January.
These films are being promoted in India through a campaign named ‘Torch Campaign’. During the ‘Torch Campaign’ in Chennai, trailers of these films were screened.
Apart from this, the audio and trailer of the upcoming film ‘Puthar’ was also released during the event.
Directors Seenu Ramasamy, R Parthiban and Arun Vaidyanathan, actors R K Suresh and R S Shivaji were also present on the occassion.
The selected films include the
the Tamil films ‘Maamanithan’ [The Great Man] by Seenu Ramasamy,
Mugizh by Kartick Swaminathan, and ‘Iravin Nizhal’ [Shadow of the Night] by Radhakrishnan Parthiban, ‘Gargi’ by Gautham Ramachandran, and ‘Visithiran’ by M Padmakumar, Assamese film ‘Bokul Phulor Dore’ directed by Sanjeev Hazarika and produced by Riniki Bhuyan Sarma, Malayalam film ‘The One and The Many Within’ by Chidambara Palaniappan L, Bengali film #
‘Homecoming’ by Soumyajit Majumdar, Marathi film ‘Taath Kana’ by Girish Mohite, Malayalam film ‘Nest of Sorrows’ by Joshy Mathew, Malayalam film ‘Avanovilona’ By Sherry and Deepesh T and Bengali film ‘Jhilli’ by Ishaan Ghose.
The Torch Campaign kicked off from Guwahati on November 15. The second phase of the event was organised at Kolkata. The next phase of the launching will be held at Mumbai [1st December], Chandigarh [16 December], Rohtak [17 December], and Jodhpur [26 December]. After the event in Jodhpur, the torch will be handed over to the filmmakers of Delhi, who will bring it to Jaipur on 5 January.
During the launching ceremony, Jaipur International Film Festival founder–director Hanu Roj informed that the co-production meet during the film festival will be organized on 8 January.
Hanu Roj will be moderating the meet himself for the first time. Inviting all the south film industry’s producers and directors, Hanu asserted that this time, the film’s Co-Production worth 100 crores INR will be discussed about. Many south filmmakers will be coming to the festival for this event, as they showed interest in filmmaking in the Rajasthani language.
“After 12 films’ screening during the film festival in Jaipur, awarded films would be shown in four cities Srinagar, Thiruvananthapuram, Hyderabad, and Bangalore, and the dates for the screening would be declared in February 2023”, festival founder–director Hanu Roj informed.
“One film may receive more than one award and one film may not get any award, as each film needs to fulfil the parameters decided by Jury”, said festival spokesperson Rajendra Boda.
The prestigious jury includes Jim Rygiel,
Stephen Castor, Marc Baschet
And Kamlesh Pandey. Shaji N Karun will be the Chairperson of this jury.
To participate in the Festival ~ Delegates registration is open on JIFF website
http://jiffindia.org/
ஜெய்ப்பூர், கவுகாத்தி மற்றும் கொல்கத்தாவைத் தொடர்ந்து சென்னையை வந்தடைந்த ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா (JIFF) பிரச்சார சுடர்
JIFF-ல் திரையிடப்படும் 12 திரைப்படங்களின் டிரெய்லர்கள் திரையிடப்பட்டன
தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் வரலாற்று சிறப்புமிக்க தருணம்: கங்கை அமரன்
அடுத்த ‘பிரச்சார சுடர்’ நிகழ்வு டிசம்பர் 1-ம் தேதி மும்பையில் நடைபெறும்
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் (JIFF) 15-வது பதிப்பை விளம்பரப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட ‘பிரச்சார சுடர்’ பயணத்தின் மூன்றாவது நிகழ்ச்சி சென்னையில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டர் லேப்ஸில் நடைபெற்றது.
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கங்கை அமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய மற்றும் தமிழ் சினிமாவிற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்பதில் சந்தேகமில்லை என்று கங்கை அமரன் தெரிவித்தார்.
முதன்முறையாக, ஒரு திரைப்பட விழா பிராந்திய சினிமாவை உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தும் நோக்கில் செயல்படத் தொடங்கியுள்ளது, என்றார் அவர்.
“ஹனு ரோஜ் மற்றும் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் இந்த சிறந்த முயற்சிக்கு எனது பாராட்டுகள். இது வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஒரு முயற்சியாகும். இந்திய சினிமா ஒரு புதிய பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டது. திரைப்பட விழாக்களின் உண்மையான முக்கியத்துவத்தை இப்போது நான் உணர்ந்து கொண்டேன்,” என்று கங்கை அமரன் கூறினார்.
ஜனவரி 6 முதல் 10 வரை நடைபெறும் 15வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் போது இந்திய பனோரமாவின் கீழ் பல்வேறு இந்திய மொழிகளில் உருவாகியுள்ள 12 முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்படும்.
இந்தப் படங்கள் ‘பிரச்சார சுடர்’ மூலம் விளம்பரப்படுத்தப்படுகின்றன. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இந்தப் படங்களின் டிரைலர்கள் திரையிடப்பட்டன.
இதுதவிர விரைவில் வெளிவரவிருக்கும் ‘புதர்’ படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சீனு ராமசாமி, ஆர் பார்த்திபன், அருண் வைத்தியநாதன், நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ் படங்களான சீனு ராமசாமியின் ‘மாமனிதன்’, கார்த்திக் சுவாமிநாதனின் ‘முகிழ்’, ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’, கவுதம் ராமச்சந்திரனின் ‘கார்கி’, மற்றும் எம் பத்மகுமாரின் ‘விசித்திரன்’ ஆகிய படங்கள் இந்த விழாவில் திரையிடப்படும்.
இதை தவிர சஞ்சீவ் ஹசாரிகா இயக்கத்தில் ரினிகி புயன் சர்மா தயாரித்த அசாமிய திரைப்படமான ‘போகுல் புலோர் டோரே’, சிதம்பர பழனியப்பன் எல் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘தி ஒன் அண்ட் தி மெனி வித்தின்’, சௌம்யாஜித் மஜும்தாரின் பெங்காலி படம் ‘ஹோம்கமிங்’, கிரீஷ் மோஹிதேவின் மராத்தி படம் ‘தாத் கானா’, ஜோஷி மேத்யூவின் ‘நெஸ்ட் ஆஃப் சோரோஸ்’ மலையாளப் படம், ஷெர்ரி மற்றும் தீபேஷ் டியின் மலையாளப் படம் ‘அவனோவிலோனா’ மற்றும் இஷான் கோஸின் பெங்காலி படம் ‘ஜில்லி’ ஆகியவையும் திரையிடப்படும்.
நவம்பர் 15 அன்று கவுகாத்தியில் இருந்து ‘பிரச்சார சுடர்’ தொடங்கியது. நிகழ்ச்சியின் இரண்டாம் கட்டம் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் அடுத்த கட்டம் மும்பை [1 ஆம் தேதி], சண்டிகர் [16 டிசம்பர்], ரோஹ்தக் [17 டிசம்பர்] மற்றும் ஜோத்பூரில் [26 டிசம்பர்] நடைபெறும்.
ஜோத்பூரில் நடைபெறும் நிகழ்வுக்குப் பிறகு, ஜோத்பூரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களிடம் ஜோதி ஒப்படைக்கப்படும், அவர்கள் அதை ஜனவரி 5-ம் தேதி ஜெய்ப்பூருக்கு கொண்டு வருவார்கள்.
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவின் நிறுவனர்-இயக்குநர் ஹனு ரோஜ், திரைப்பட விழாவின் போது கூட்டு தயாரிப்புகள் குறித்த சந்திப்பு ஜனவரி 8-ம் தேதி ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஹனு ரோஜ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். தென் இந்திய திரையுலகின் அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களை விழாவுக்கு அழைத்த ஹனு, இந்த முறை 100 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு தயாரிப்புகள் பற்றி விவாதிக்கப்படும் என்று உறுதியளித்தார். தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் இந்த விழாவிற்கு வரவுள்ளனர்.
ஜெய்ப்பூரில் நடைபெறும் திரைப்பட விழாவில் 12 படங்கள் திரையிடப்பட்ட பிறகு, விருது பெற்ற படங்கள் ஸ்ரீநகர், திருவனந்தபுரம், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு நகரங்களில் திரையிடப்படும். மேலும் பிப்ரவரி 2023-ல் திரையிடுவதற்கான தேதிகளும் அறிவிக்கப்படும் என்று விழா நிறுவனர்-இயக்குநர் ஹனு ரோஜ் தெரிவித்தார்.
“ஒரு படம் ஒன்றுக்கு மேற்பட்ட விருதுகளைப் பெறலாம் மற்றும் ஒரு படத்திற்கு எந்த விருதும் கிடைக்காமலும் போகலாம். ஏனெனில் ஒவ்வொரு படமும் நீதிபதிகள் முடிவு செய்யும் அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டும்” என்று விழாவின் செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர போடா கூறினார்.
நடுவர் குழுவில் ஜிம் ரிஜில், ஸ்டீபன் காஸ்டர், மார்க் பாஷெட்
மற்றும் கமலேஷ் பாண்டே இடம்பெற்றுள்ளனர். இந்த நடுவர் மன்றத்தின் தலைவராக ஷாஜி என் கருண் இருப்பார்.
விழாவில் பங்கேற்க ~ பிரதிநிதிகள் பதிவு JIFF இணையதளத்தில் நடைபெறுகிறது