தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
அண்ணாசாலை
சென்னை – 6

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் , திரைப்பட கதாநாயகனும்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினருமான மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழக அமைச்சராக பதவி ஏற்க உள்ளது தமிழ் திரை உலகத்திற்கே பெருமை என்று சொல்லலாம். அவருக்கு அமைச்சர் பதவி வழங்கிய தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திரை உலகினரிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களின் இதயங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம்.

முத்தமிழ் அறிஞர் டாகடர் கலைஞர் அவர்கள் இளம் வயதிலேயே திரைத்துறையில் தனது வசனத்தால் புரட்சியை ஏற்படுத்தியவர். படங்களயும் தயாரித்தவர். சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி, மந்திரியாகி, ஐந்துமுறை முதல்வராக
ஆட்சிக் கட்டிலில் மட்டுமல்ல, மக்கள் மனதிலும் இன்றுவரை நீக்கமற நிறைந்து வாழ்ந்துவருகிறார்.

அதேபோல் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும், திரைத் துறையில் ஆளுமையுடன் கூடிய மய்யமாக வலம் வந்து, கதாநாயகனாக நடித்து வெற்றிபெற்று , சந்தித்த முதல் தேர்தலிலேயே வெற்றிபெற்று சட்ட சபையில் நுழைந்து அசத்தி வருகிறார்.

திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அய்யா கலைஞர் ஆசியுடனும் , தந்தை தளபதி வழிகாட்டுதலிலும் , மந்திரி பதவியில் சிறப்பாக பணியாற்றி மக்கள் நம்பிக்கையை பெறுவார் என்பது நிச்சயம். திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் திரைஉலகம் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here