என்.ஜீவானந்தம் தயாரிப்பில்
முக்கிய கேரக்டரில் ராதாரவியும்
கதையின் நாயகியாக
பாடகி ராஜலட்சுமியும் நடிக்கும்
” லைசென்ஸ்”
ஜெ.ஆர்.ஜி. புரொடக்சன்ஸ் சார்பில் என். ஜீவானந்தம் தயாரிக்கும் “லைசென்ஸ்”. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார்.
கதையின் நாயகியாக பிரபல மேடை பாடகி ராஜலட்சுமி செந்தில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர் தான் ” என்ன.. மச்சான்…, மற்றும் ஏ…சாமி. போன்ற சூப்பர்ஹிட் பாடல்களை படங்களில் பாடி அசத்தியவர். இவர் நடிக்கும் முதல் படமிது.
கணவன்-மனைவி பாசம், அண்ணன்-தங்கை பாசம், உடன்பிறந்த சகோதரர்களின் பாசம், தாய் – மகள் பாசம் இவைகளை எடுத்துக்காட்டிட நிறைய படங்கள் வந்துள்ளது. அதேசமயம் தந்தை-மகள் பாசத்திற்காக வந்த படங்கள் குறைவுதான்.அந்த வகையில் பாரதி படைத்த புதுமைப்பெண்ணாக ராஜலட்சுமி தந்தையுடன் களத்தில் சாதிக்கபோகும் படம் தான் லைசென்ஸ் என்று தயாரிப்பாளர் என்.ஜீவானந்தம் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில் ” கணபதி பாலமுருகன் என்னிடம் இந்த கதையை பற்றி சொன்னார். அதுவரை சினிமா மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பு இல்லை. இந்த கதையில் ராஜலட்சுமி தான் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். என்று சொன்னதும் இந்தப் படத்தை தயாரிக்கலாம் என்ற நம்பிக்கை பிறந்தது” என்று கூறும் என்.ஜீவானந்தம் இந்த படம் சமுதாயத்தில் நல்ல வரவேற்பு பெறும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்…
இதில் முதன்மை பாத்திரத்தில் விஜய் பாரத், கீதா கைலாசம், தான்யா அனன்யா, அபியாத்தி ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமான அதிதி பாலமுருகனும் நடிக்கின்றனர்.
இந்த மாதம் படப்பிடிப்பு துவங்கி இடைவிடாமல் நடைபெற உள்ளது.
பைஜூ ஜேக்கப் இசையமைக்க , ரமணிகாந்தன் பாடல் எழுத, காசிவிஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரபல முன்னனி எடிட்டரான ஆண்டனியிடம் எடிட்டிங் பயிற்சி பெற்ற பெண் எடிட்டரான வெரோனிகா பிரசாத் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
கவுண்டமணி நடித்த “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” படத்தை இயக்கிய கணபதி பாலமுருகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தனது இரண்டாவது படமாக இயக்குகிறார்.
திரைத்துறையிலும், நாடகத்துறையிலும் நடிகராகவும், பாடலாசிரியராகவும் வலம் வந்த கவிஞர் வே. நடராஜன் அவர்களின் மகனான
என்.ஜீவானந்தம் தனது முதல் படமாக ” லைசென்ஸ்” திரைப்படத்தை தயாரிக்கிறார்.