உலகத் தொலைக்காட்சியில் முதல் முறையாக நடிகை பிரியாமணி நடித்த நகைச்சுவை கலந்த கிரைம் திரில்லரான பாமகலாபம் திரைப்படத்தை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ்

~இந்த ஞாயிறு, ஜனவரி 1ம் தேதி மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்

சென்னை,28th டிசம்பர்: Viacom18 நிறுவனத்தின் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், நடிகை பிரியாமணி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாமகலாபம் திரைப்படத்தின் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் வரும் ஞாயிறு புத்தாண்டு அன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது. இந்த நகைச்சுவை கலந்த கிரைம் திரில்லரை சிறப்பு பார்ட்னர் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் வளையல் மேளாவுடன் இணைந்து, ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 1 புத்தாண்டு அன்று மதியம் 2:00 மணிக்கு கலர்ஸ் தமிழ் ஒளிபரப்புகிறது. குற்ற உலகில் சிக்கி கொண்டு தவிக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் பாமகலாபம் திரைப்படத்தை கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

அபிமன்யு தடிமேட்டி எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் ஜான் விஜய், நடிகர் சாந்தி ராவ், நடிகர் சரண்யா பிரதீப் மற்றும் நடிகர் கிஷோர் ஆகியோர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர். ஒரு பழங்கால ஃபேபர்ஜ் முட்டையின் திருட்டுடன் தொடங்கும் இத்திரைப்படம், அக்கம்பக்கத்தினருடன் வதந்திகள் பேசிக் கொண்டு, தான் செய்யும் சமையலை வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் அனுபாமா மோகன் (நடிகை பிரியாமணி) என்ற இல்லத்தரசியின் வாழ்க்கையைப் பற்றியது. உலக தாதாவான நாயரால் (நடிகர் ஜான் விஜய்) கடத்தல் மற்றும் கொலைகளின் உலகில் சிக்கிக் கொள்கிறாள். பின் அவள் ஒரு கொலையில் சந்தேகப்பட்டு, திருடப்பட்ட ஃபேபர்ஜ் முட்டையை எடுத்து வரும்படி நாயரால் கட்டளையிடப்படுகிறாள்.கடைசியில் அனுபாமா,போலீஸ்காரர்கள் மற்றும் நாயரின் பிடியில் இருந்து எப்படி தப்பித்து, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார் என்பது கதையின் மீதியை உருவாக்குகிறது.

இத்திரைப்படத்தை பற்றி இயக்குனர் அபிமன்யு தடிமேடி கூறுகையில், “பாமகலாபம் திரைப்படம் ஆந்திராவில் பாரம்பரிய நடன வடிவத்தின் அதே பெயரில் மேலும் நரகாசுரன் என்ற அரக்கனை சத்யபாமா தேவி கொன்றதை அடிப்படையாகக் கொண்டு ஈர்க்கப்பட்டது. பிரியாமணியின் கதாபாத்திரமான அனுபாமாவை, தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் தலைசிறந்த பெண்ணாக வடிவமைத்துள்ளோம். தீமைகளின் இறுதியில் நன்மையே வெல்லும் என்ற கருத்தே இப்படத்தின் இறுதி திருப்பமாகும் . கலர்ஸ் தமிழில் உலகத் தொலைக்காட்சி பிரீமியர் மூலம், இப்படம் அதிகமான மக்களை ஈர்க்கும் மற்றும் அனைவராலும் பாராட்டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். ”

இது குறித்து நடிகை பிரியாமணி கூறும் போது, படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கோவிட்-ன் போது மேற்கொள்ளப்பட்டு, 25 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்தோம். இது நான் முதன்முறையாக எதிர்கொண்ட ஒரு சவாலாகவும்,முற்றிலும் ஒரு அற்புதமான அனுபவமாகவும் இருந்தது. மேலும், சத்தமாக இருக்கும் அனுபாமா போன்ற கதாபாத்திரம் நிஜத்தில் நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு முற்றிலும் எதிரானது. இதில் வரும் அனுபாமா கதாபாத்திரத்தில் நான் முழுமையாக குடும்ப பெண்ணாக வாழ்ந்து இருக்கிறேன். கலர்ஸ் தமிழ் போன்ற தொலைக்காட்சியில் புத்தாண்டு அன்று எனது திரைப்படம் உலகத் தொலைக்காட்சி பிரீமியராக வெளிவருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கலர்ஸ் தமிழுடன் இணைந்து அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கலர்ஸ் தமிழில் புத்தாண்டு சிறப்பு படமாக பாமகலாபம் திரைப்படம் ஜனவரி 1, ஞாயிறு மதியம் 2.00 மணிக்கு உங்கள் குடும்பத்தினருடன் காணுங்கள்.

சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808), மற்றும் Videocon D2H (CHN NO 553)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here