Press Release – World’s Fastest Drummer Siddharth Nagarajan’s ‘Layaatraa’

The land of Tamil Nadu has been gifted with plenty of young talents, who have carved a niche of excellence in the world of art and music on global platforms. Time and again, many such young wizards are bringing forth more acclaims to our land, and Chennai based drummer Siddharth Nagarajan is the latest one to join the league. He became the cynosure of global musical panorama by creating a new Guinness World Record for playing the most number of drumbeats in a minute (2109 BPM). Of course, this makes him the “World’s Fastest Drummer” in addition to his 7 records (both National & International) that he holds including ‘Balshree Recipient’ (Padmashree Equivalent for Children). What’s more intriguing is Siddarth Nagarajan being acclaimed as one of the seven geniuses in the world by the National Geographic channel. Now, the music artist has started a new journey – “Layaatraa” , that explores different musical genres and musicians. It’s a fusion of world music series of songs with the seasoning of Indian flavors, where each song will feature a renowned musician across the world.

“The first song in this series is “RUN” featuring a world-renowned legendary Drummer “Jamie Borden” from LAS VEGAS, USA.

“He was a role model for me from my childhood and getting to feature him in my composition is dream come true for me… It was a unique idea to do this because it was a drummer featuring another drummer and I would claim this experience of working with him as one of the ever cherishing moments in my life. This song has some thriller grooves and a drum faceoff in the middle venturing into different rhythmic interpretations on different instruments,” says Siddharth Nagarajan, who hails from a family of musicians. His father Nagi is a renowned percussionist and rhythm programmer working and performing with many music directors in the industry including the maestro Ilayaraja sir. His mother Vidya Nagi is a singer/ vocal instructor.

Currently, Siddharth is playing the drums for multiple artists globally and composing and producing his own music which is available online on renowned platforms like Spotify, Apple Music, etc

உலகின் வேகமான ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜனின் ‘லயாத்ரா’!

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர். உலக அளவில் முத்திரை பதித்து சாதனை படைத்து வரும் இளைஞர் வரிசையில் சமீபத்திய சேர்க்கை சென்னையைச் சேர்ந்த ட்ரம்ஸ் இசைக் கலைஞர் சித்தார்த் நாகராஜன். ஒரு நிமிடத்தில் அதிக பட்ச ட்ரம் பீட்ஸ் அடித்தவர் (2109 BPM) என்ற வகையில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து ஒட்டுமொத்த இசையுலகின் கவனத்தையும் ஈர்த்தவர் இவர். ‘பத்மஸ்ரீ’ பட்டத்துக்கு இணையாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் ‘பாலஸ்ரீ’ பட்டம் உட்பட, தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏழு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சித்தார்த்துக்கு இந்த கின்னஸ் சாதனையானது உலகின் அதிவேக ட்ரம் இசைக் கலைஞர் என்ற மேலும் ஒரு சாதனை மகுடத்தையும் சூட்டியிருக்கிறது. உலகின் ஏழு மேதைகளில் ஒருவர் என்று நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலின் பாராட்டுதல்களையும் இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மாறுபட்ட இசை வடிவங்களையும் வேறுபட்ட இசைக் கலைஞர்களையும் உள்ளடக்கிய ‘லயாத்ரா’ என்ற புதிய முயற்சியில் இப்போது இசைக்களம் காண்கிறார் சித்தார்த். புகழ் பெற்ற இசைக் கலைஞர் ஒருவரைக் கொண்டு, சர்வதேச அளவில் பிரபலமான பாடல்களை இந்திய ரசனைக்கேற்ப வழங்குவதே ‘லயாத்ரா’.

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரைச் சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற ட்ரம்ஸ் இசை மேதையான ஜம்மி பார்டர் பங்கு பெறும் ‘ரன்’ பாடல் லயாத்ராவின் முதல் பாடலாக வெளியாகவிருக்கிறது.
இது குறித்து விவரித்த சித்தார்த் “எனது சிறுவயதிலிருந்தே எனக்கு ரோல் மாடலாக இருந்த ஜம்மி பார்டர் எனது இசைக் கோர்ப்பில் பங்கு பெறுவதன் மூலம் என் கனவு நனவாகியிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஒரு ட்ரம் இசைக் கலைஞர் மற்றொரு ட்ரம் இசைக் கலைஞரின் இசைக் கோர்வையில் வாசிப்பது என்ற தனித்துவம் மிக்க இந்த கருத்தாக்கம், என் வாழ்வின் மறக்க முடியாத மகத்தான தருணங்களை எனக்கு வழங்கியிருக்கிறது. ட்ரம்ஸ் இசைக் கருவியின் ஆதிக்கம் மிகுந்திருப்பினும், அதனுடன் இணைந்து இடையிடையே வரும் வெவ்வேறு இசைக் கருவிகள் புதுமை மிகுந்த த்ரில்லான அனுபவத்தை இசை ரசிகர்களுக்கு வழங்கும்” என்கிறார் சித்தார்த் நாகராஜன்.
புகழ் பெற்ற இசைக் குடும்பத்திலிருந்து வந்திருக்கும் சித்தார்த்தின் தந்தை நாகி, மேஸ்ட்ரோ இளையராஜா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களிடம் ரிதம் ப்ரோகிராமராகப் பணியாற்றியவர். சித்தார்த்தின் தாயார் வித்யா நாகியும் பாடகி மற்றும் இசை ஆசிரியை.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற கலைஞர்களுக்காக ட்ரம்ஸ் வாசித்து வரும் சித்தார்த் இசைக் கோர்வை செய்து தயாரித்த ஆல்பங்கள், ஸ்பாட்டிஃபி, ஆப்பிள் ஸ்டோர்ஸ் போன்ற தளங்களில் கிடைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here