கலைஞர்களுக்கு சமூக பொறுப்பு அவசியம். அதை உணர்ந்ததால் தான், சூர்யா அகரம் அறக்கட்டளையையும், கார்த்தி உழவன் அறக்கட்டளையையும் நடத்துகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகள். இந்த விவசாயிகளை மேடை ஏற்றி பாராட்ட ஒரு வாய்ப்பு அமைத்த கார்த்தி மிகப்பெரிய காரியத்தை செய்து இருக்கிறார். தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்திய தேசத்தின் ஆன்மா கிராமங்களில் தான் இருக்கிறது என்றார். அவர் குறிப்பிட்டது விவசாயத்தை தான். ஏனெனில் நமது தேசம் விவசாயத்தின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. நமது விவசாயிகள் தண்னிறைவு பெற்று மகிழ்ச்சியாக இருந்தால்தான் நமது பொருளாதாரம் விருத்தியும் மேன்மையும் அடையும். அதற்காக சிறு சிறு முயற்சிகள் பலரும் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை கேள்விப்படும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படிபட்ட விவசாயிகளுக்கு பாராட்டுதலை கொடுத்து ஊக்குவிப்பது அவசியம்.

என்னை இந்த விழாவிற்கு அழைக்கும் போது, ஒரு பெண்கள் குழுவினர் என்னென்ன சாதித்தார்கள் என்று கூறினார். அதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நம் ஆதி காலத்தில் காட்டை திருத்தி கழனி ஆக்கினார்கள். காட்டை திருத்தியது ஆண்களாக இருந்தாலும் கழனி ஆக்கியது பெண்கள்தான். இதுதான் நமது வரலாறு. சக்தி தான் எல்லாம் சக்தி இல்லையேல் செயல்கள் இல்லை. இந்த சக்தியான பெண்கள் நினைத்தால் தான் வீடும் உருப்படும் நாடும் உருப்படும். பெண்களின் விடாமுயற்சியும், உழைப்பும், பொறுமையும், சகிப்புத்தன்மையும் அதன் மூலம் அவர்கள் சாதனைகளை பாராட்டுவதை எனது பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here