தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான திரு. பூச்சி எஸ்.முருகன் அவர்கள் இன்று (01.02.2023) மதுரையில் உள்ள நடிகர் வடிவேலுவின் இல்லத்துக்கு நேரில் சென்று துக்கம் விசாரித்ததுடன் சரோஜினி அம்மாளின் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினார். வீட்டு வசதி வாரிய சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ரவீந்தரநாத் ஜெயபால், மதுரை மண்டலக் குழு தலைவர் சுதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.