வாரிசு படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகை பாவனாவுடன் நாயகனாக களமிறங்கும் கணேஷ் வெங்கட் ராம் !!

கணேஷ் வெங்கட்ராம், பாவனா நடிக்கும் புதிய ஹாரர் திரில்லர் திரைப்படம் !!!

இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் வாரிசு திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.

அபியும் நானும் படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், பிக்பாஸ் நிகழ்ச்சி என மக்கள் மனங்களை வென்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம் தற்போது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வில்லனாக கலக்கியிருக்கிறார். தமிழில் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் அவரது பாத்திரம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது நீண்ட நீண்ட இடைவேளைக்கு நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார், நடிகர் கணேஷ் வெங்கட்ராம்

இது குதித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது…
வாரிசு படத்தின் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாளம் சினிமாவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளேன் தமிழில் நமக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைப்பதில்லையே என நினைத்திருக்கிறேன். ஆனால் அது வாரிசு மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி. அதிலும் இப்படத்தில் எனது கேரக்டரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். இது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்போது வாரிசை தொடர்ந்து, பல வித்தியாசமான கதபாத்திரங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கிறது. சில படங்களில் முழுக்க என் லுக்கை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். வாரிசுக்கு பிறகு இப்போது இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கிறார். கொடைக்கானல் சென்னை பகுதியில் நடக்கும் கதை. அன்னபெல்லா சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர்
கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்கும். அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான படைப்புகள் எனது நடிப்பில் வரவுள்ளது. விரைவில் அது பற்றிய அறிவிப்புகளும் வரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here