Actor Ajith Koshy
The versatile actor has captured our interests by performing pivotal roles and delivering commendable performances in many movies of leading actors. Be it the role of a heroine’s father or a police commissioner, he doesn’t miss to steal our attention with a glorious charisma. He keeps winning our appreciation through his performances in various OTT series, and Pan-Indian movies and is on a successful path now.
Tell us about yourself
I was born in Kerala but grew up in Chennai. I would say, I am a complete Royapuram resident, and am staying with my family in this locality for many years. My fascination with cinema and acting has existed since my teenage years. I would consistently perform stage plays during my school and college days. Although I had an insatiable passion for acting during those days, I couldn’t get into the profession as I didn’t get proper opportunities. After my 45 years of age, I thought of giving it a try again, and decided to push myself ahead and prove my potential as an actor. Currently, I have acted in 35 movies, 40 ad commercials, and 5 web series. My film journey is pretty successful and is glad about it.
Your Life before embarking on a journey as an actor
Before getting into acting, I was involved in the profession of Group Installing in the Construction field. For a few years, I was doing business in Dubai. I came back to Tamil Nadu after 2010 and then decided to completely get involved in the cinema industry. The passion of becoming an actor alone brought me back here. Risk factors are present in every single profession and place. Even now, there are lots of risks involved in my acting profession, but we have to go for it.
In the majority of the films in your career, you have appeared as a police officer.
I really don’t know the reason. Sometimes, Tamil has stereotyped me in this respective role. Whenever there is a role involving a police officer or commissioner role, I become their first preference and they instantly zero on Ajith Koshy. To be honest, many technicians have saved my contact name as Commissioner Ajith Koshy on their mobile phones.
They approach me for the commissioner role feeling that I would be perfect for it. So far, I haven’t rejected any offers, and I keep giving my best in my performances. Maybe, after consistently watching my performance, directors, and producers might give me a few more challenging roles, and that belief keeps me pushing ahead. I am looking forward to acting in village-based roles with traditional shirt dhoti looks.
Any roles that you have done so far, which remain close to your heart?
I had performed a villain role in a web series that featured Nandha sir in the lead role, and I really liked it a lot. The second season of this series is all set for premiere shortly. I later acted in Vishal sir’s ‘Veerame Vaagai Soodum’. My character in this movie was liked and appreciated by all. Later, I was a part of the web series Suzhal which had a great opening worldwide and garnered appreciation for my performance. Witnessing my performance in this series, I started getting more opportunities in the Hindi web series. All credit goes to Pushkar and Gayathri for giving me a great chance to be a part of this series.
What kind of roles would you like to perform?
Every actor has pros and cons. Many have told me that my body language and looks are the major positives that makes me look befittingly perfect for the roles of a stylish villain and corporate villain. I would like to act in such roles. Apart from police officer roles, I would like to perform villain characters, which I can deliver easily. Besides, I also have the ability to deliver dark comedy, but I have not any such offers till now. If I get such an opportunity, audiences too will see me in a unique dimension. The duty of an actor is to explore the potential in any given role, and I am curiously waiting for such offers.
You’re a part of many Hindi and Malayalam movies as well. What is the experience of working in different regional industries?
Every industry has a unique process and their approaches are different. Hindi Industry owns more professionalism, and the scene paper will be ready in our respective caravan before we arrive. Malayalam cinema is quite unique and different. In a similar way, Tamil cinema is unique and special in its own way.
Tell us about dubbing in your voice for other languages too
Malayalam is my mother tongue, and I am fluent in Tamil and Hindi as well. This helps me dub in my own voice for all these languages. More than dubbing for myself, many approach me to dub for other actors, especially for corporate characters as they have to speak multiple languages. They feel that my voice would be apt for dubbing. However, I have to first register myself in the dubbing union. Only then, I would be officially able to dub for movies. I desire to get it accomplished this year.
Have you ever thought about not getting major roles in movies?
Of course, I feel disappointed and worried about it. The career of actors and cricketers are the same. A Test would change the career of an actor, and similarly, when acting in any given role with complete dedication, one fine day, actors might get noticed for their work, and be given big opportunities. I am keeping my fingers crossed with such hopes.
Is there any onscreen character of yours that you thought would garner more attention, but didn’t?
I played Jai’s father in the movie ‘Pattampoochi’ starring Sundar C and Jai as the lead characters. It was a different role indeed.
About your current projects…
Talks are going on to be part of a movie produced by director Pa. Ranjith and directed by Athiyan Athirai. Furthermore, preparations are going to be a part of actor Rahman’s Pan-Indian web series. Besides, a few more movie projects are in pipeline.
What do you think cinema is missing out on with stereotypes?
Instead of stereotyping a particular actor, exploring and recognizing his potential and capabilities, and giving him the perfect roles will make a big difference in a movie. The film gets more chances to achieve success. It would be really great if contemporary directors stop stereotyping actors, and give them characters according to their talents, the respective movies will get appreciated for perfect casting.
நடிகர் அஜித் கோஷி :
பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி மனதை ஈர்க்கும்படியான நடிப்பை தருபவர். ஹீரோயின் அப்பா, போலீஸ் கமிஷ்னர் என இவரது முகம் மனதிற்குள் பச்செக்கென ஒட்டிக்கொண்ட முகம். ஓடிடி பான் இந்தியா என வளர்ந்திருக்கும் திரைத்துறையில் இப்போது இவரது திரைப்பயணம் வெற்றிப்பாதை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.
தன் நடிப்பால் கவனம் ஈர்க்கும் நடிகர் அஜித் கோஷி பற்றி..
உங்களை பற்றி..
“நான் பிறந்தது கேரளாவில், ஆனால் வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னை தான். பக்கா ராயபுர வாசி.
நான் குடும்பத்துடன் ராயபுரத்தில் வசித்து வருகிறேன். சினிமா ஆர்வம் என் இளைமைப்பருவத்தில் இருந்தே எனக்கு
பள்ளி, கல்லூரிகளிலயே மேடை ஏறி நடிப்பது, நாடகம் போடுவது என நடிப்பின் மீது தீராத ஆர்வத்துடன் இருந்தேன். அப்பொழுதே எனக்கு நடிப்பு துறையில் ஒரு ஆர்வம் இருந்தது, ஆனால் அப்போது என்னால் முழு வீச்சுடன் நடிப்பு துறைக்குள் இறங்க முடியவில்லை. அதற்கான வாய்ப்புகள் அப்போது கிடைக்கவில்லை. பின்னர் 45 வயதுக்கு பிறகு, ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என மனதில் தோன்றிய எண்ணத்தில் தான் தீவிரமாக நடிகராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து இறங்கிவிட்டேன். இப்போது 35 படங்கள், 40 விளம்பரங்கள், 5 வெப் சீரிஸ்கள் என தொடர்ந்து எனது திரைப்பயணம் சிறப்பாக போய்கொண்டு இருக்கிறது.
நடிக்க வருவதற்கு முன்..
நடிக்க வருவதற்கு முன் நான் கன்ஸ்ட்ரக்சன் பிரிவில் ரூஃப் இன்ஸ்டாலிங்க் செய்து வந்தேன், சில காலம் துபாயில் தொழில் செய்து கொண்டு இருந்தேன், 2010-க்கு பிறகு தான் நான் தமிழ்நாட்டிற்கு வந்தேன், பின்னர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துவிட்டேன். ஆனால் நடிகராக வேண்டும் என்ற எண்ணம் தான் என்னை இங்கு இழுத்து வந்துவிட்டது. ரிஸ்க் எல்லா இடத்திலும் இருக்க தான் செய்கிறது. நடிகராக நான் இங்கு தொடர்ந்து இயங்கி கொண்டு இருப்பதிலும் ரிஸ்க் இருக்க தான் செய்கிறது. ஆனால் நாம் ரிஸ்க் எடுதது தான் ஆக வேண்டும்.
நீங்கள் அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறீர்கள்..!?
அது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் சினிமாவில் இதில் ஒரு ஸ்ட்ரீயோடைப் செய்கிறார்கள். எதாவது ஒரு படத்தில் போலீஸ் கதாபாத்திரம், கமிஷ்னர் கதாபாத்திரம் வேண்டுமென்றால் அஜித் கோஷியெய் அழைக்கலாம் என்று முடிவெடுத்துவிடுவார்கள். எனக்கு தெரிந்து எனது பெயரையே கமிஷ்னர் அஜித் கோஷி என்றுதான் டெக்னீஷியன் சிலர் அவர்களது செல்லில் வைத்துள்ளார்கள்.
ஒரு கமிஷ்னர் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று நினைத்து அவர்கள் என்னை அணுகுகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை எனக்கு வரும் கதாபாத்திரங்களை தொடர்ந்து நான் மறுக்காமல் செய்து வருகிறேன். நிறைய கதாபாத்திரங்கள் செய்த பின்னர், பலர் என்னை பார்த்து எனக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்க வாய்ப்பு இருக்கிறது, அதனால் நான் தொடர்ந்து இயங்கி வருகிறேன். வேஷ்டியெய் மடித்து கட்டி கிராமத்து வேடங்களில் நடிக்க ஆசை.
நீங்கள் இதுவரை பண்ண கதாபாத்திரங்களில் உங்களுக்கு நெருக்கமாக அமைந்த கதாபாத்திரம்..
நந்தா சார் முன்னணி நாயகனாக நடித்த இருதுருவம் வெப் தொடரில் ஒரு வில்லன் கதாபாத்திரம் செய்து இருந்தேன், அது எனக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. அந்த தொடரின் இரண்டாவது சீசன் இப்போது விரைவில் வெளியாக உள்ளது. அதன்பிறகு விஷால் சார் உடைய ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தில் நடித்து இருந்தேன், அதில் எனது கதாபாத்திரம் அனைவரையும் ஈர்க்கும்படி இருந்தது. அதன் பிறகு உலகம் முழுவதும் பலமொழிகளில் வெளியாகி மிகபெரிய வெற்றிபெற்ற சுழல் தொடரிலும் நான் நடித்து இருந்தேன், அந்த தொடர் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அந்த தொடரை பார்த்து எனக்கு நிறைய இந்தி தொடர்களில் இருந்தும் வாய்ப்பு வந்தது. அதற்கு புஷ்கர் காயத்ரிக்கு தான் நன்றி கூற வேண்டும்.
என்ன மாதிரியான கதாபாத்திரங்கள் செய்ய ஆசை??
எல்லா நடிகர்களுக்கும், பலமும் இருக்கும் பலவீனமும் இருக்கும். எனது பலம் முதலில் எனது பலமான உடல்மொழியும் உருவமும். அதனால் ஒரு ஸ்டைலான வில்லனாகவோ, கார்பரேட் வில்லனாகவோ என்னால் நடிக்க முடியும் என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். அது போன்ற கதாபாத்திரங்களை செய்ய நான் ஆர்வமாக இருக்கிறேன். போலீஸ் இல்லாத வில்லன் கதாபாத்திரங்களையும் என்னால் எளிதாக கையாள முடியும். ஆனால் இதை தாண்டி எனக்கு டார்க் காமெடி நன்றாக வரும், ஆனால் அதை காட்டும் வகையில் எனக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லை. அது போன்ற கதாபாத்திரம் எனக்கு அமைந்தால், மக்களும் என்னிடம் இருந்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறுவார்கள். ஒரு நடிகராக அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சென்று அதை சிறப்பாக கையாள வேண்டியது நமது கடமை. அதனால் எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் எனது முழு திறமையையும் காட்ட நான் ஆர்வமாக இருக்கிறேன். “
தமிழ் தாண்டி மலையாளம், இந்தியில் நடிக்கிறீர்கள். ஒரு நடிகராக வெவ்வேறு மொழிகளில் நடிப்பது உங்களுக்கு என்னவிதமான உணர்வுகளை கொடுக்கிறது?
ஒவ்வொரு மொழியிலும் திரையாக்கத்திலயே வித்தியாசம் இருக்கிறது. திரைப்படம் எடுக்கும் அணுகுமுறையிலும் வித்திசாயம் இருக்கிறது. இந்தியில் அதிக புரொபசனிலிசம் இருக்கும், கேரவனில் சீன் பேப்பர் நாம் வருவதற்கு முன்னரே இருக்கும். மலையாள சினிமா அதில் இருந்து மாறுபட்டு இருக்கும். தமிழ் சினிமா முற்றிலுமாக வேறு மாதிரி இருக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
மற்ற மொழிகளிலும் நீங்களே டப் செய்கிறீர்கள் அது பற்றி கூறுங்கள்?
மலையாளம் எனது தாய் மொழி என்பதால் அது எனக்கு சரளமாக வரும். அதோடு தமிழ், ஹிந்தி மொழியும் எனக்கு தெரியும் என்பதால் நானே குரல் கொடுக்கிறேன். ஆனால் நான் எனக்கு குரல் கொடுப்பதை தாண்டி பலர், எனது குரல் சிறப்பாக இருப்பதாக கூறி, என்னை மற்ற நடிகர்களுக்கும் டப்பிங்க் பேச கேட்பார்கள். கார்பரேட் கதாபாத்திரங்கள் பல மொழிகள் பேசும் கதாபாத்திரமாக இருக்கும். அந்த கதாபாத்திரங்களுக்கு நான் டப்பிங்க் கொடுத்தால், அது சிறப்பாக இருக்கும் என்று பலர் என்னிடம் கூறி இருக்கிறார்கள். ஆனால் நான் டப்பிங்க் யூனியன் மெம்பர் இல்லை. அதில் இணைந்த பின்னர் தான் என்னால் அதிகாரபூர்வமாக மற்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுக்க முடியும். இந்த வருடத்தில் அதை செய்யவும் ஆசைபபடுகிறேன் பார்க்கலாம்.
மிகப்பெரிய கதாபாத்திரங்கள் அமையவில்லை என்று யோசித்து இருக்கிறீர்களா?
ஆம்.. அந்த வருத்தம் கொஞ்சம் இருக்கிறது. ஆனால் நடிகர்கள் வாழ்க்கை கிரிக்கெட்டர் உடைய வாழ்க்கை போல தான். ஒரு கிரிக்கெட்டர் உடைய வாழ்க்கையை டெஸ்ட் தான் மாற்றும். அதுபோல நிறைய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் போது, ஒரு நாள் எனக்கான திரைப்பட டெஸ்ட் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
நீங்கள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று நினைத்து, ஆனால் அதை அடையாத கதாபாத்திரங்கள் எவை?
சுந்தர் சி, ஜெய் சார் நடித்த பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஜெய் சார் உடைய அப்பா கதாபாத்திரத்தில் நடித்தது. அது ஒருவித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தது.
நீங்கள் தற்போது நடித்து கொண்டு இருக்கும் படங்கள்?
பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குனர் அதியன் ஆதிரை உடைய அடுத்த படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை போய் கொண்டு இருக்கிறது. அடுத்து நடிகர் ரகுமான் சார் உடைய நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு பான் இந்திய வெப் தொடரில் நடிப்பதற்கான ஒப்பந்த வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. அதுபோக இன்னும் சில படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் போய் கொண்டு இருக்கிறது.
ஸ்ட்ரியோடைப்பால் சினிமா எதை இழக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
ஒரு குறிப்பிட்ட நடிகரை ஸ்ட்ரியோடைப் செய்யாமல், அவருக்கு என்ன திறமை இருக்கிறது என்று கண்டறிந்து, அவருக்கு தகுந்த கதாபாத்திரத்தை கொடுத்தால் முழு திரைப்படமுமே ஒரு வித்தியாசமான அனுபவமாக தெரியும், சிறப்பாகவும் வரும். இன்னும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாய்ப்பு இருக்கிறது. இப்போது இருக்கும் புதுமுக இயக்குனர்கள், ஸ்ட்ரியோடைப்-யை தவிர்த்து நடிகர்களுக்கு அவரது திறமைகளுக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை அமைத்து கொடுத்தால், சிறந்த நடிகர்களை தேர்வு செய்த திரைப்படமாக அது அங்கீகரிக்கப்படும்.