மு.க.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளில்

நடிகர் சேது. கருணாஸ் வாழ்த்து

தமிழ்நாட்டு முதல்வர், மதிப்புமிகு தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் 70 ஆவது பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் பயணம் என்பது பிறர் கற்றுக்கொள்ளும் நல்ல வரலாறாகும். அவர் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக, மக்கள் போற்றும் தலைவராக இருப்பதற்கு அவரது ஓய்விலா உழைப்பே அவரது வெற்றிக்கான உரமாக இருந்துள்ளது என்பதை யாவரும் அறிவர்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு பல்வேறு வலிகளை தாங்கி வழிகளை அமைத்துக் கொண்டவர்.

பல சிறைவாசம் சென்று நிறைவாக உயர்ந்தவர்,
திராவிட தலைவர்கள் பெரியார், அண்ணா கலைஞர் ஆகியோரின் கொள்கை வழி நின்று அவர்களின் கனவுகளை நிறைவேற்றிக் காட்டும் ஒப்பற்ற தலைவராக ஸ்டாலின் அவர்கள் திகழ்கிறார்கள்.

இந்த ஒன்றரை ஆண்டு ஆட்சியில் மக்கள் நன் மதிப்பை பெற்றுள்ளார். திராவிட மாடல் என்ற உத்தியை கையாண்டு பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக வளர்கிறார். அவர் இன்னும் பல்வேறு சாதனைகள் செய்து, தொடர்ந்து மக்கள் விரும்பும் அரசியலை முன்னெடுக்க, சமூக நீதி அரசியலை மேலும் வளர்த்தெடுக்க அவரது பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்..

திராவிட இயக்க பாரம்பரியத்தின் நம்பிக்கை ஒளியாக திகழும் தளபதி அவர்கள் நூற்றாண்டை கடந்தும் வாழ்வார் நான் அவரது 70 ஆவது பிறந்த நாளில் அன்போடு வாழ்த்துகிறேன்.

இங்ஙனம்
சேது. கருணாஸ்
தலைவர், முக்குலத்தோர் புலிப்படை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here