இந்த படத்தின் மூலம் அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்…
இதற்கு முக்கிய காரணம் அவரிடம் ஒரு தயாரிப்பாளர் கதை கேட்டு இருக்கின்றார் அந்த கதைக்கு சசிக்குமார் அவர்களை ஹீரோவாக ஒப்பந்தம் செய்திருக்கின்றார்…
கதாநாயகனுக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து இந்த படத்தில் சசிகுமார் அவர்கள் மிகக் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றார்…
இந்த மந்திரமூர்த்தி இயக்குனரை போல் இன்னும் பல மந்திரமூர்த்திகள் பல நல்ல கதைகளை வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கின்றார்கள்
ஆனால் ரவீந்திரன் சார் போல தயாரிப்பாளர்கள் தற்போது மிக குறைவாகவே உள்ளார்கள் அனைவரும் ஹீரோவை நம்பி மட்டுமே படம் எடுக்க விரும்புகிறார்கள்
ஆகையினால் நல்ல கதைகளை வைத்துக்கொண்டு காத்திருக்கும் புது முக இயக்குனர்கள் மிக கடுமையான காலகட்டத்தில் தற்போது உள்ளார்கள் …
இந்த “அயோத்தி” படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய அனைவரும் உதவ வேண்டும் இது போன்ற படங்கள் மூலம் ஹீரோ வசம் இருக்கும் சினிமாவை நல்ல கதையை படமாக்கும் இயக்குனர் வசமும் கொண்டுவர ஒரு தூண்டுதலாக அமையும்…
உடனே இந்த படத்தை பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்…
இயக்குனர்கள் சங்கத்தின் மூலமும் இப்படத்தை திரையிட ஏற்பாடு செய்து வருகின்றோம் அப்பொழுது தவறாமல் அனைவரும் இந்த படத்தை வந்து பாருங்கள்…
இந்த செய்தியை அனைவருக்கும் பகிருங்கள்…
நன்றி…
அன்புடன்
இயக்குனர்,நடிகர், சாய்ரமணி