2018ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற ஆ காரல ராத்திரி என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படமாக வெளியாகி இருக்கிறது கொன்றால் பாவம். வரலட்சுமி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியுள்ளார். பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இசை சாம் சி.எஸ்.
வறட்சி மாவட்டமான தர்மபுரியின் ஒரு கடைக்கோடி கிராமத்தில் வாழ்ந்து வரும் சார்லி, ஈஸ்வரி ராவ் தம்பதியின் மகள் வரலட்சுமி சரத்குமார். வறுமை காரணமாக இருந்த விவசாய நிலத்தையும் விற்றுவிட்டு, சொந்த நிலத்திலேயே விவசாய கூலிகளாக வாழ்ந்து வருகின்றனர் வரலட்சுமி குடும்பத்தினர். இந்நிலையில் ஒரு நாள் இரவு அந்த அவர்கள் வீட்டுக்கு வரும் சந்தோஷ் பிரதாப், தான் பக்கத்து ஊர் என்றும் இரவு நேரமாகிவிட்டதால் ஒரு நாள் இரவு மட்டும், தங்கிக்கொள்ள அனுமதி கேட்கிறார். நீண்ட
தயக்கத்துக்குப்பிறகு ஒப்புக்கொள்ளும் அந்தக்குடும்பம், சந்தோஷ் பிரதாப்பை என்ன செய்தது, அக்குடும்பம் சந்தித்தது என்ன என்பதே கொன்றால் பாவம் படத்தின் கதை.
இருக்கை நுனுக்கு வரவைக்கும்படியான த்ரில்லர் படத்தை மிக மிக அழுத்தமாகவும், இயல்பாகவும் பதிவு செய்துள்ள இயகுனர் தயாள் பத்மநாபனுக்கு பாராட்டுக்கள். கன்னடத்தில் பல படங்கள் இயக்கி இருந்தாலும் தமிழில் இதுவே முதல்படம். முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார் இயக்குனர். வரலட்சுமி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ், சந்தோஷ் பிரதாப், மனோ பாலா என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சொற்ப நடிகர்களைக் கொண்டு காட்சிகளை அமைத்திருக்கும் இயக்குனர் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொண்டது முதிர்ச்சியை காட்டுகிறது
வரலட்சுமி சரத்குமார் பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். சார்லியின் அனுபவமும் முதிர்ச்சியும் நடிப்பில் வெளிப்படுகிறது. ஈஸரிராவ், சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். சென்ட்றாயன், கவிதாபாரதி, சுப்ரமணியம் சிவா என சிறிய பாத்திரங்களில் நடித்திருப்போரும் மனதில் பதிகிறார்கள்.
இது போன்ற த்ரில்லர் படத்துக்கு மிகப்பெரிய பலம் பின்னணி இசை. சாம் சிஸ் அதை உணர்ந்து இசையமைத்துள்ளார். பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. கேமிரா கதையின் களத்தையும் காலகட்டத்தையும் கண்முன்னே நிறுத்துகிறது. நறுக்குதெரித்தது போல் எடிட்டிக் இருப்பது சிறப்பு. மொத்தத்தில் கொன்றால் பாவம் முதுதுத் தண்டு சில்லிடவைக்கும் அனுபவம்
கொன்றால் பாவம்: ரோலர் கோஸ்டர் ரைட்