இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு
திரு.கமல்ஹாசன், இயக்குநர் திரு. ஷங்கர் உள்ளிட்டோர் வழங்கினர்.உடன் திரு.RKசெல்வமணி அவர்களும் இருந்தார்
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “இந்தியன் 2”. பல வருடங்களாக இந்த படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தை நடந்து பின்பு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த தளத்தில் கிரேன் ஒன்று விபத்துக்குள்ளாகி இந்த படத்தின் துணை இயக்குனர் ஒருவர் உட்பட மூன்று பேர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அதுமட்டுமின்றி 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நசாரத்பெட்டையில் உள்ள ஒரு பிரைவேட் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்த இந்த படப்பிடிப்பின்போது அனைவரும் ஒரு சீனுக்கு செட் அமைத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேன் ஒன்று பழுத்துக்குள்ளாகி விழுந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதன் பொழுது அங்கு இருந்த நடிகர் கமல்ஹாசன் அவசர அவசரமாக காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு ஏற்பாடு செய்து, மேலும் இறந்தவர்களின் போஸ்ட் மார்டத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விபத்து குறித்தும் இறந்தவர்களின் குடும்பத்தின் நிலை குறித்தும் காயப்பட்டவர்கள் நிலைமை குறித்தும் ஆலோசனை செய்து அதற்கான முடிவுகளை எடுப்பதற்காக இன்று மாலை 5 மணிக்கு வடபழனியில் உள்ள FEFSI அலுவலகத்தில் கமல்ஹாசன், இயக்குனர் சங்கர் மற்றும் லைகா நிறுவன உரிமையாளர் ஒன்று சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் அந்த விபத்தில் மரணம் & காயமடைந்தோர் குடும்பத்துக்கு உதவி