Dhileepan’s ‘YEVAN’ movie is set to release on April 7.

The film ‘YEVAN ‘ is produced and directed by debutant director Duraimurugan on behalf of Sun Light Cinemas. Dhileepan pugazhendhi is the hero of the story and actress Deepani Mano has been paired with him along with J.K. Sanjeeth, Ujjini Roy, gana Bala, Paandi Ravi, and others have acted. Cinematography by Sivaraman and  A.K. Sasitharan composed the music. The songs featured in the film were written by the late Pulavar Bulamaipitthan, Viveka, gana Bala and Ekha Rajasekhar did the film editing work. Dhileepan Pugazhendhi, the grandson of poet Pulavar  Pugazhendhi, is the hero of the film.

Speaking about the film, the director said that there have been many films centered on the mother-son relationship in the Tamil film industry. But in this film, we have set the screenplay of mother son relationship from a new angle. That means the hero of the story will give his life to his mother and also, take life for his mother. This is the one line story in this film. ‘YEVAN ‘ is all set to entertain all types of audiences.
He has acted in all the fight scenes in this film without putting any dope. Actor Dileepan, who trained in fighting properly, surprised everyone by acting like Jackie chan in a scene where he jumped from the 20th floor even when the people on the set told him to do so. Dhileepan pugazhendhi, the hero of the movie Evan (YEVAN), has the ability to show stunts like actor Ajith Kumar in two-wheeler and four-wheeler vehicle stunts.

ஏப்ரல் 7 இல் வெளியாகவிருக்கும் திலீபனின் ‘எவன்’

சன் லைட் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘எவன்’. இதில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் இவர்களுடன் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க, இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், தமிழ் திரையுலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அம்மா மகன் உறவை புதுவிதமான கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தில் ஒரு வரி கதை. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்து பட்டறைக்கு சென்ற போது என் கண்ணில் பட்டு ஷண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாக பதிந்தவர் தான் திலீபன். அதன் பிறகு அவரை பற்றி விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரை தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் எனும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து ஏப்ரல் ஏழாம் தேதியன்று வெளியாகிறது. ” என்றார்.

இந்த படத்தில் உள்ள எல்லா சண்டை காட்சிளிலும் எந்த வித டூப் போடாமல் இவரே நடித்துள்ளார் .முறையாக சண்டை பயிற்சி கற்ற நடிகர் திலீபன் அவர்கள் .படப்பிடிப்பில் இருந்தவர்கள் சொன்ன போதும் கூட 20 மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கி ஜானை போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் .இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தை போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் எவன் (YEVAN ) பட நாயகன் திலீபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here