நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 47 வருடமாக கலைத்துறையில் தமிழக மக்களை மகிழ்வித்து வருவதற்காகவும், இந்திய அரசின் திரைத்துறை சார்ந்த உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றமைக்காகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்னை, நந்தனம் ஓய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் மாதம் 26ஆம் தேதி பாராட்டு விழாவும், நலிந்த ரசிகர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவையும் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில் நிகழ்ச்சி திடீரென தவிர்க்க முடியாத சூழ்நிலை என காரணம் காட்டி நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிக்கையை வெளியிட்டார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் செயலாளருமான சோளிங்கர் என்.இரவி அவர்கள். அவர் வெளியிட்ட அந்த அறிக்கையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களிடத்தில் நேரில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் பாதிக்கப்பட்ட ரசிகர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகளுள் ரஜினிகாந்த் அன்பு இல்லம் எனும் பெயரில் கான்கிரீட் தளத்துடன் வீடும், வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தவர்களுக்கு பங்க் அமைத்து தருதல், கணவனால் கைவிடப்பட்டு வருவாய் இன்றி தவித்து வந்த பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்ட தேவையான ஊதுவத்தி தயாரிக்கும் இயந்திரம், இட்லி மாவு இயந்திரம், தையலியந்திரம் உள்ளிட்டவைகளும், மேற்படிப்பு படிக்க இயலாமல் தவித்து வந்த மாணவர்களுக்கு முழு கல்விக்கான நிதியும், உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியும், ஏழ்மையில் தவித்து வந்த குடும்ப தலைவிகளுக்கு குடிசை தொழில் தொடங்க நிதியும், மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனங்களும் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் நடிகர் ரஜினகாந்த் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து ஒருமுறையாவது தங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை வழங்குமாறு மிகுந்த உருக்கத்துடன் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here