என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி இராமநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன்கருதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவாக அளித்தோம். அவைகளை தாயுள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் 2015-முதல் 2022 ஆம் ஆண்டுகளில் சிறு முதலீட்டில் தயாரித்து வெளிவந்த சிறந்த திரைப்படங்களுக்கு ரூ 7 லட்சம் மானியம் வழங்கப்படும். அதற்கான மானியக்குழு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறிய முதல்வர் அவர்கள் மேலும் கூறுகையில் திரைப்பட நகரத்தை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் புதிதாக மாற்றி அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்துள்ளதையும் தெரிவித்தார்.

திரைப்பட தயாரிப்பாளர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு உதவிடும் வகையில் தயாரிப்பாளர்களின் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் பெற்றிட வழிகாட்டியுள்ள , நமது பாசத்திற்குரிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ,
மரியாதைக்குரிய இளைஞர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி
ஸ்டாலின் அவர்களுக்கும், அன்பிற்கினிய செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் , ஒட்டுமொத்த திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பில் இருகரம் குவித்து நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here