தனுமுனைப்பாக தொழில் துவங்கி ஸ்டார்ட் அப் துறையில் சிறந்து விளங்குபவர்களை ஊக்கிவிக்கும் வகையில், அவர்களுக்கு விருது வழங்கும், டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில், ‘100 Most Inspiring Startup Awards 2023’ எனும் நிகழ்வு துவங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோருக்கான ஒரு அரிய வாய்ப்பாக, ஏப்ரல் 15, 2023 அன்று, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘100 Most Inspiring Startup Awards 2023’ நிகழ்வை வழங்குவதில் டேக் கேர் இன்டர்நேஷனல் அறக்கட்டளை பெருமை கொள்கிறது.

சமூகத்தில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் இவ்விழாவினில், சமூகத்தில் பல நற்காரியங்கள் மூலம் புகழ்பெற்றவரான, டாக்டர். முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், U.A.E. தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தமிழ் சமூகத் தலைவர் டாக்டர். பால் பிரபாஹர், U.A.E. தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர். திரு. அப்துல்லா சலேம் அல் சுவைதி – மூத்த பொது மேலாளர், துறைமுகங்கள், சுங்கம் & இலவச மண்டலக் கழகம், துபாய். திரு. ஹமத் கசெமி – துணைத் தலைவர் மற்றும் இணை நிறுவனர் FMI, டாக்டர் முஸ்தபா சாசா – தலைவர், ராஜ் குழுமம் மற்றும் திரு. கோகுல், எம்.டி. SME ஒப்பந்த நிறுவனம் LLC. ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் திரு. மரியம் கபீர் – SME குழும நிறுவனங்களின் நிதி ஆலோசகர், Dr. இளங்கோ ரெங்கசாமி – அசோசியேட் டீன், GBS துபாய், துபாய் நாலெட்ஜ் பார்க், துபாய், திரு. அமீர் அல்மர்சூக்கி மற்றும் திரு. அஹ்மத் அல் ரஃபி ஆகியோர் இந்நிகழ்வில் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரு. முகமது இப்ராஹிம், அறக்கட்டளை மூலம் சமூகத்தில் பல நற்காரியங்களை நிகழ்த்தியதன் மூலம், புகழ்மிக்க மனிதராகவும் பல புதிய முயற்சிகளை அங்கீகரித்து ஆதரவளித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டவர். இந்நிகழ்ச்சியில் அவரது பங்களிப்பு இந்த புதிய நிகழ்வுக்கு மிகப்பெரிய மதிப்பு சேர்க்கும் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘100 Most Inspiring Startup Awards 2023’ ஒரு மேம்மபடுத்தப்பட்ட நிகழ்வாக இருக்கும், இந்நிகழ்வு கிட்டத்தட்ட உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கிறது. இந்த நிகழ்வானது, அந்தந்த துறைகளில் சிறந்த சாதனைகளை வெளிப்படுத்தி, சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலைக் கொண்ட, இந்த ஆண்டின் 100 நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்களை துவங்கி, வெற்றிபெற்றவர்களை அங்கீகரிக்கும். டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, பல ஆண்டுகளாக சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடைந்துள்ள தனித்துவம், புதுமை, மறைக்கப்பட்ட திறமை மற்றும் சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை கொண்டாடும் ஒரு நிகழ்வாக இருக்கும்.

டேக் கேர் இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும், இந்த அறக்கட்டளை அமைப்பு பல துறைகளிலும் புதுமைகளை திறமைகளை அங்கிகரித்து வருகிறது. இது ஸ்டார்ட்அப் பிஸினஸ் நிகழ்வுகளில், தொழில்முனைவு மற்றும் புதுமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறக்கட்டளை இளம் திறமைகளை வளர்ப்பதற்கும், நம்பிக்கைக்குரிய ஸ்டார்ட்அப்களுக்கு அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கு ஒரு தளத்தை வழங்குவதற்கும் உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த துறையில் உள்ள அனைவரையும் ஒன்றிணைந்து செயல்பட வைத்து, ஒத்துழைப்பு வழங்கி, இந்த நிகழ்வுகளின் மூலம், சமூகத்தில் வணிகம் மூலம் மாற்றத்தை நிகழ்த்தும் பொதுவான இலக்கை நோக்கி பயணிக்கலாம் என, டேக் கேர் இன்டர்நேஷனல் அறக்கட்டளை நம்புகிறது.

இந்த நிகழ்வு புதிதாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒரு அறிமுகத்தை பெறுவதற்கும், தொழில்துறை தலைவர்களுடன் இணைப்பை உருவாக்குவதற்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் மிகவும் உதவிகரமாக இருக்கும், மேலும் அவர்கள் எதிர்காலத்தில் வளர்ச்சியடைய மதிப்புமிக்க நுண்ணறிவைப் பெறவும் இது உதவும்.

ஒட்டுமொத்தமாக, ‘100 Most Inspiring Startup Awards 2023’ நிகழ்வு ஸ்டர்ட் அப் பிஸினஸ் தொடங்கி நடத்துபவர்களுக்கு ஒரு தனித்துவமான வாய்ப்பாகும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் இந்த நிகழ்வு உற்சாகமான மற்றும் இத்துறையில் பல அரிய தகவல்கள் தரும் பயணமாக இருக்கும். ‘100 Most Inspiring Startup 2023’ நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதற்கான இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

‘100 Most Inspiring Startup Awards 2023’ நிகழ்வில் பங்கு பெரும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்

இந்தியா, துபாய், மலேசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். பங்கேற்பாளர்கள் www.takecareinternational.org என்ற இணையதளத்தில் பதிவு செய்து நிகழ்வில் கலந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here