பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட் ஆகியோர் நடிப்பில், கெளசல்யா ராணி அவர்கள் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் தமிழரசன். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு -ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடுத்தரவர்கத்தை சேர்ந்த, நேர்மையான காவல்துறை அதிகாரியான விஜய் ஆண்டனியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, சுரேஷ் கோபியின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு நடக்கும் முறைகேடுகளை தட்டிக்கேட்கப்போய் விஜய் ஆண்டனிக்கும் சுரேஷ் கோபிக்கும் நடக்கும் யுத்தம்தான் தமிழரசன் படத்தின் கதை

நாட்டில் நிலவும் மிக முக்கிய சமூக பிரச்சினையை பற்றி சொல்லி இருக்கும் இப்படம், முழுக்க முழுக்க உண்மை என்று தோன்றுவதுபோல் படமாக்கப்பட்டிருக்கும் விதமும், திரைக்கதையும் நம்மை கவர்கின்றன. நிஜ காவல்துறை அதிகாரியை கண்முன்னே நிறுத்தியுள்ளார் விஜய் ஆண்டனி. ரம்யா நம்பீசனின் துளியும் மிகையில்லாத நடிப்பு சிறப்பு, சுரேஷ் கோபி, சோனு சூட், ராதாரவி என படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவருடைய பாத்திரமும் தனித்தன்மையுடன் படைக்கப்பட்டிருப்பது இயக்குனருக்கு இருக்கும் பாத்திரப்படைப்புத் திறமையைக் காட்டுகிறது.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு படத்தின் முதுகெலும்பு என்று சொல்லலாம். இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் அருமை, பின்னனி இசையில் இசைஞானியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்ற வகையில் பின்னனி இசை சிறப்பாக அமைதிருக்கிறது.

தமிழரசன் நடிகர், நடிகையர்

விஜய் ஆண்டனி ( தமிழரசன் ), ரம்யா நம்பீசன் ( லீனா ), சுரேஷ்கோபி, ( முருகானந்தம் ), ராதாரவி ( சுகுமாரன் நம்பியார் ), சோனு சூட் ( ராணா பிரதாப் சிங் ), ஒய்.ஜி.மகேந்திரன் ( அர்த்தனாரி ) ,யோகிபாபு , ரோபோ சங்கர் (நம்பிராஜன் ), விவன்( முகிலன் ), கஸ்தூரி ( நளினி ), சங்கீதா ( பத்மா சீனிவாசன் ), சாயாசிங், மதுமிதா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், மாஸ்டர் பிரணவ் (கேப்டன் பிரபாகரன் ) இயக்குனர் மோகன் ராஜாவின் மகன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
இசை – இளையராஜா
பாடல்கள் – பழனிபாரதி, A.R.P ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா, சதீஷ்.
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்.
தயாரிப்பு – கெளசல்யா ராணி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்

தமிழரசன் – ஆட்சி செய்கிரார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here