மனோ பாலா சாரின் மறைவு
மிகவும் வருத்தமாக இருக்கிறது

நண்பர் கதிர்வேல் இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்திற்காக நடிகர்கள் மனோ பாலா எம்.எஸ்.பாஸ்கர் இளவரசு மாரிமுத்து விச்சு படவா கோபி கணேஷ்கர் நான் என பலரும் பொள்ளாச்சியில் இருந்தோம். அனேகமாக இதுதான் அவரது கடைசி படம் என்று நினைக்கிறேன்… ஒரு நாள் அவரே தயாரித்த சாப்பாட்டை எனக்கும் இன்னும் சிலருக்கும் ரூமிற்கு கொடுத்து அனுப்பினார்…. அவ்வளவு ருசி…

மறுநாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மனோபாலா சார் ஷூட்டிங்கு வரவில்லை என்று சொன்னார்கள். கேள்விப்பட்டு நானும் நண்பர் கணேஷ்கரும் மாலை அவரது ரூமிற்கு சென்று ஆறுதல் அளித்துவிட்டு… பிரார்த்தனை செய்து விட்டு வந்தோம்… சோர்வாக இருந்தபோதும் அவருக்கே உரித்தான பாணியில் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போய்… ஹாஸ்பிடலில் சேர்ந்து சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று இறந்துள்ளார்….

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்… பிராத்திக்கிறேன்

மனோபாலா சாரிடம்
என்னை கவர்ந்த விஷயங்கள்…

⭕ நகைச்சுவை உணர்வு

அவர் இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். எல்லோரையும் கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருப்பார். கிண்டல் செய்யப்படுபவரே அதை ரசிக்கும் வண்ணம் இருக்கும்… அவர் அருகில் இருந்தால் மனசே லேசாகிவிடும்.

⭕ பன்முகத்திறமை

சினிமாவில்… தயாரிப்பு , இயக்கம் நடிப்பு என்பதை தாண்டி ஓவியங்கள் வரைவது சுவையாக சமைப்பது என பன்முக திறமையாளர்… இத்தனை திறமைகள் இருந்தும் அதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் எப்பொழுதும் எதார்த்தமாக இருக்கக்கூடியவர்.

⭕ சுறுசுறுப்பு… உழைப்பு

60 வயதில் ரிட்டயர்மென்ட் ஆகி அக்கடான்னு வீட்டில் உட்கார்ந்து இருப்பவர்கள் மத்தியில் இவர் 69 வயதிலும் படங்கள் தயாரிப்பது , இயக்குவது , நடிப்பது , யூடியூப் சேனல் நடத்துவது மற்றும் சினிமா யூனியன்களிலும் முக்கிய பொறுப்புகள் வகித்து அதற்காக வேலை செய்வது இண்டஸ்ட்ரீஸ் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது என எப்போதும் எறும்பு போல் சுறுசுறுவென உழைத்துக் கொண்டிருப்பார். ஆச்சரியமாக இருக்கும். அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்….

இன்னும் எத்தனையோ….
என்றும் உங்கள் நினைவோடு…..
சாம்ஸ்

மரண வேதனையிலும்
படப்பிடிப்பு தளம் வந்து
படுத்தபடியே
“என்னால முடியலடா!
மருத்துவ மனைக்கு போய் வருகிறேன்”
என சொல்லி விட்டு போனவரே
இப்படி சொல்லாமல் போவது முறையா?

கடைசி பிறந்த நாளை
எம்மோடு கொண்டாடி விட்டு
இப்படி நடுவழியில் திண்டாட
விட்டுவிட்டு போதல் சரியா?

காலங்கள் கடந்தாலும்
கடைசியாய்
நடித்து
எங்களோடு
வாழ்ந்த கணங்கள்
என்றும் எங்கள்
நினைவில் நிலைத்து நிற்கும்.

இயக்குனர் K V கதிர்வேலு
&
RAACK PRODUCTIONS PVT LTD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here