வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யா நேரடியாக தமிழில் நாயகனாக நடித்திருக்கும் படம் கஸ்ட்டி. இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். சரத்குமார், கீர்த்திஷெட்டி, ராம்கி, அரவிந்த்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

90களின் இறுதியில் தமிழ்நாட்டின் எல்லையோரம் இருக்கும் ஆந்திர ஊரான சாகி நெட்டி பள்ளி என்ற இடத்தில் கான்ஸ்டபிளாக இருக்கும் நாக சைதன்யா எதேச்சையாக சிறிய கேஸ் ஒன்றில் அரவிந்த்சாமியையும், சம்பத் ராஜையும் கைது செய்கிறார். அதன் பிறகே சம்பத்ராஜ் ஒரு சிபிஐ அதிகாரி என்றும், அரவிந்த்சாமி ஒரு மிகப்பெரிய ரவுடி என்று தெரியவருகிறது.

அரவிந்த்சாமியையும், சம்பத்ராஜையும் கொல்ல நடக்கும் அரசியல் சதியில் இருந்து காப்பாற்றி சிபிஐ நீதிமன்றத்தில் ஒப்படைக்க, நாக சைதன்யா எடுக்கும் முயற்சிகள்தான் கஸ்ட்டி படத்தின் கதை.

வெங்கட் பிரபு அவர்களின் இயகத்தில் வெளியாகும் படங்கள் என்றாலே, திரைக்கடையும், ட்ரீட்மெண்டும் வித்தியாசமாகவும், நகைச்சுவை கலந்தும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இப்படமும் பூர்த்தி செய்திருக்கிறது. அதே நேரம் படம் பரபரப்பாகவும் அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்தும் இருப்பது அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்திருப்பதற்கு காராணமாகவும் அமைந்திருக்கிறது.
நாகசைதன்யாவுக்கு தமிழில் இது முதல் நேரடிப்படம், இபடத்துக்குப்பிறகு அவர் இன்னும் பல நேரடி தமிழ் படங்களில் நடிக்கலாம் என்ற அளவுக்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார். படத்தின் இரண்டாவது நாயகன் என்று அரவிந்த் சாமியை சொல்லலாம். அரவிந்த்சாமி வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கின்றன. சரத்குமார், ராம்கி, பிரேம்ஜி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா மற்றும் அவரது இளவல் யுவன் ஆகியோரின் பாடல்களும் பின்னனி இசையும் பட்த்துக்கு மிகப்பெரியபலம். குறிப்பாக தீம் மியூசிக் மிகச்சிறப்பு. படத்தின் ஆக்சன் காட்சிகள் மற்றும் பரபரப்பான காட்சிகளில் ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டரின் திறமை பளிச்சிடுகிறது.

கஸ்ட்டி: கலகல ஆக்சன் த்ரில்லர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here