ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் வழங்கும், நடிகர் ஆர்யா நடிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !!

நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது…
இங்கு இந்த அரங்கில் இவ்வளவு கூட்டத்தைப் பார்க்க நன்றாக இருக்கிறது. இயக்குநர் முத்தையா படத்தில் இது எனக்கு முதல் வாய்ப்பு, இனிமேல் எல்லா படத்திலும் வாய்ப்பு தருகிறேன் என்று கூறியுள்ளார். இங்கு உள்ள கூட்டத்தை விட ஜூன் 2 தியேட்டரில் நல்ல கூட்டம் இருக்குமென நம்புகிறேன். இந்தப்படம்  நல்ல அனுபவமாக இருந்தது.  படம் கண்டிப்பாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகர் ரிஷி ரித்விக் பேசியதாவது…
முத்தையா சாருக்கு நன்றி இரண்டாவது முறையாக எனக்கு வாய்ப்பளித்துள்ளார், எல்லாம் முடிந்தது என்ற நேரத்தில் கிடைத்த வாய்ப்பு,  ஆர்யா சாரை அவ்வளவு பிடிக்கும். டிரெய்லர் விழாவிலேயே சொன்னேன் நடிக்கும் போது அஸிஸ்டெண்டிடம் சொல்லி எனக்குக் குடை பிடிக்கச் சொன்னார். நன்றாகப் பார்த்துக்கொண்டார். அவர் மனதிற்கே இந்தப்படம் பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நடிகர் தருண் கோபி பேசியதாவது…
வாய்ப்பு தந்த பங்காளி முத்தையா சாருக்கு நன்றி. ஆர்யா என் நீண்ட கால நண்பர் அவருக்கு நன்றி.  இதில் வில்லனாக நடிச்சிருக்கேன்  முத்தையா ஸ்டைலீஷ் டைரக்டர் 360 டிகிரில ஓடி ஓடி படம் எடுப்பார்.“காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” கண்டிப்பா திரையில் பேசும்.

நடிகை சித்தி இத்னானி பேசியதாவது…
இது எனக்கு மிக முக்கியமான படம் , ஆர்யா எனக்குப் படப்பிடிப்பில் மிகவும் உதவியாக இருந்தார் , படக்குழுவினர் படத்திற்காக மிகுந்த உழைப்பைக் கொடுத்துள்ளோம் , குறிப்பாக இயக்குநர் குழு இரவு பகல் பாராமல் உழைத்துள்ளனர்,  உங்கள் ஆதரவு எங்களுக்கு வேண்டும் அனைவரும் ஜூன் 2 ஆம் தேதி படத்தை தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும், நன்றி.

நடன இயக்குநர் ஷோபி பேசியதாவது…
விருமன் படத்திற்குப் பிறகு முத்தையா சாருடன் இரண்டாவது படம் மிகவும் நன்றி, ஜி வீ பிரகாஷ் சார் அழகாக இசையமைத்துள்ளார், பாடல் அருமையாக வந்துள்ளது, ஆர்யா எனர்ஜியுடன் பாடல்களில் நடனம் ஆடியுள்ளார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் படம் பிடிக்கும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர்  நரேன்  பேசியதாவது..,
முத்தையா சார் எளிதில் திருப்தி அடையாத ஒருவர், அவருடன் பணி புரிவது நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி

நடிகர் சிங்கம் புலி பேசி
உங்கள் அனைவரையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி, நான் கடவுள் படத்தில் ஆர்யாவுடன்  நீண்ட நாட்கள் உடனிருந்தேன் , ஆனால் அந்த படத்திற்குப் பிறகு அவரைப் பார்க்கவே இல்லை , இந்த படத்தின் படப்பிடிப்பில் தான் பார்த்தேன், அதற்கு முத்தையாவிற்கு நன்றி, இந்தப் படத்தில் பணி புரிந்தது பெருமையாக இருக்கிறது, இந்தப் படம் இரண்டாவது பாகம் வந்தால் நன்றாக இருக்கும், எனக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் அனைவருமே பெரிய ஜாம்பவான்கள் தான் அனைவரும் ஒன்றிணைந்து இந்த படைப்பைக் கொடுத்துள்ளோம், படம் அருமையாக வந்துள்ளது அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.

தயாரிப்பாளர் PL தேனப்பன் பேசியதாவது…
இந்தப் படம் பக்கா கமர்ஷியலாக இருக்கும் , முத்தையா எடுக்கும் படம் அனைத்தும் வெற்றிதான், அது போல இந்த படமும் கண்டிப்பாக வெற்றி அடையும் வாழ்த்துகள் நன்றி.

கலை இயக்குநர் வீரமணி பேசியதாவது..
இன்றைய விழா நாயகன் ஜீவி சாருக்கு நன்றி , பாடல் அருமையாக வந்துள்ளது , படத்தில் ஆர்யாவின் உழைப்பைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும், பாடல் மற்றும் சண்டை காட்சிகள் என மாறி மாறி உழைப்பைக் கொடுத்துள்ளார், படம் நன்றாக இருக்கும் அனைவரும் வந்து ஆதரவு தர வேண்டும் நன்றி.

நடன இயக்குநர் சாண்டி பேசியதாவது…
எனக்கும் ஆர்யாவுக்கும் பல நாட்களாகப் பழக்கம், அவருடைய டான்ஸ் பத்தி எனக்கு நன்றாகத் தெரியும், இந்த படத்தில் அருமையாக டான்ஸ் ஆடியுள்ளார், ஜிவி பிரகாஷ் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது, முத்தையா சார் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், கண்டிப்பாக இந்த படம் வெற்றி அடையும் நன்றி.

நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது..
இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் முத்தையா சார், எனக்கு அவருடன் வேலை செய்ய நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தில் அது நடந்துள்ளது. இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் மற்ற படங்களை விட  அதிகமாக நடித்துள்ளேன், படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது அனைவரும் வில்லன்கள் தான்,  படம் பாருங்கள் உங்களுக்குத் தெரியும் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.  

பாடலாசிரியர் ஜூனியர் நித்யா பேசியதாவது…
இந்தப் படத்தில் நான் பணிபுரியக் காரணம் ஜிவி பிரகாஷ் அண்ணன் தான் , இந்தப் படத்தில் தான் நான் பாடலாசிரியராக அறிமுகமாகிறேன். வாய்ப்பு தந்த முத்தையா அண்ணனுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

பாடலாசிரியர் லோகன் பேசியதாவது..
இந்தப் படத்தில் பாட்டு எழுதி அதைப் பாடியும் உள்ளேன், அதற்கு ஜிவி அண்ணனுக்கு நன்றி , ஆர்யா அண்ணனுக்கு நன்றி , முத்தையா சாருக்கு நன்றி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர்  பாக்கியராஜ் பேசியதாவது..
இங்கு நடன நிகழ்ச்சி நடத்திய குழுவிற்கு வாழ்த்துக்கள். அழகாக பாடிக்கொண்டே நடனம் ஆடினார்கள் அவர்களுக்கு வாழ்த்துகள் , ஆர்யா இந்தப் படத்தில் நல்ல எமோசனாக நடித்துள்ளார். முத்தையா படத்தில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தந்து, கதை செய்வதில் சிறந்தவர், அதை நினைத்து ஆச்சர்யப்பட்டுள்ளேன், ஜிவி பிரகாஷ் சிறு வயதில் பாடவே மாட்டேன் என்று என்னுடன் கூறினார். ஆனால் இன்று அவர் பாடலை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டுள்ளோம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, படக்குழுவினர் அனைவரும் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துகள் படத்தின் டிரெய்லரை பார்க்கும்போதே பெரிய ஆர்வமாக இருந்தது அனைவருக்கும் படம் பார்க்கும் ஆர்வம் இருக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் முத்தையா பேசியதாவது…
இந்த ஃபோரம் மாலில் ஆடியோ வெளியீட்டு விழா நடத்த வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இப்போது அது நடைபெற்றது நன்றி, இந்த “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்” படம் நன்றி தெரிவிக்கும் படமாக இருக்கும், படம் அனைவரும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்குமாறு இருக்கும். படத்திற்கு ஜிவி பிரகாஷ் ராஜ் பாடல்கள் பெரிதும் உதவியாக உள்ளது , மொத்தம் ஆறு பாடல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது , ஆர்யா பெரும் உழைப்பை இந்த படத்திற்கு கொடுத்துள்ளார், தயாரிப்பாளர் பெரும் உதவியாக இருந்தார் எனக்கு எந்த சிரமமும் இல்லை அதற்கு அவர்தான் காரணம் , படக்குழு அனைவருக்கும் எனது நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது..
ஆர்யாவுடன் பல வருடம் கழித்து வேலை செய்கிறேன். ராஜா ராணி படத்துக்கப்புறம் இப்போது தான் வேலை செய்கிறோம். ஆர்யா சிறந்த நண்பர். முத்தையாவுடன் கொம்பன் படத்திற்குப் பிறகு இணைந்துள்ளேன். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளது. படம் ஜூன் 2 வெளிவருகிறது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் ஆர்யா பேசியதாவது…
இந்த திரைப்படம் எனக்கு மிக முக்கியமான படம். முதல் முறையாக கிராமத்து வேடத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் முத்தையா எளிதில் திருப்தி ஆக மாட்டார். ஹீரோவை நன்றாக காட்ட வேண்டும் எனப் பயங்கரமாக உழைப்பார். ஒவ்வொரு காட்சிக்கும் கடுமையாக மெனக்கெடுவார். படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். ஜிவி எப்போது தூங்குகிறார் என்றே தெரியவில்லை, நடிப்பு இசை என ஓடிக்கொண்டே இருக்கிறார். இப்படத்தில் அட்டகாசமான பாடல்கள் தந்துள்ளார். சிங்கம் புலி, நரேன் என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். நாயகி சித்தி இத்னானிக்கு மிக முக்கியமான பாத்திரம் என்னை விட அவருக்குத் தான் டயலாக் அதிகம். மிக உணர்வுப்பூர்வமான படமாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இப்படத்திற்கு ஜி வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.

 “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”  திரைப்படம் உலகமெங்கும் 2023  ஜூன் 2 ஆம் தேதி படம் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here