சை.கௌதமராஜ் இயக்கத்தில் அருள்நிதி, சந்தோஷ் பிரதாப், துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் அம்பேத்குமார் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்துக்கு ஸ்ரீதர் ஒளிப்ப்வதிவு செய்ய, இமான் இசையமைத்துள்ளார்.

க்ரைம் த்ரில்லர் வகையறா படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதி, இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமாக முறுக்கு மீசையுடன் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அருள்நிதி. ராமநாதபுரம் பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும், தாழ்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சந்தோஷ் பிரதாப்பும், மற்றொரு வகுப்பை சேர்ந்த அருள்நிதியும் உயிர் நண்பர்கள். அந்த கிராமத்தில் அரசியல்வாதிகளால் ஏற்படும் சமூகப் பிரச்சினையை நண்பர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கழுவேத்தி மூர்க்கன் படத்தின் கதை

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், அந்த காதாபாத்திரத்துக்கு தன்னுடைய பாணியில் உயிர் கொடுப்பதிலும் வல்லவர் அருள்நிதி, அந்த வகையில் மண்மனம் மாறாத மூர்க்கன் பாத்திரத்தில் அசத்தி இருக்கிறார். தன்னுடைய பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்றாற்போல் சிறாப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார் சந்தோஷ் பிரதாப். துருதுருப்பான கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் துஷாரா விஜயன்.

படத்தின் தொடக்கத்தில் கொடுகப்படும் வர்ணணைகளிலேயே, இயக்குனர் கௌதம்ராஜ் இப்படத்துக்கு எவ்வளவு உழைத்திருக்கிறார், எவ்வளவு கள ஆய்வுகளை செய்திருக்கிறார் என்று புரிகிறது, இரண்டாம் பாதியில் அதிரடி ஆக்சன் சீட் நுனிக்கு வரவைக்கிறது. கிராமத்து தெருங்களிலும், புழுதிகாட்டிலும், கருவேல மரங்களுக்கிடையிலும் புகுந்து செல்லும் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு சிறப்பு, கணேஷ்குமாரின் சண்டைக் காட்சிகளில் அனல் பறக்கிறது, படத்தின் மிக முக்கிய ப்ளஸ் என்று சண்டை காட்சிகளை சொல்லலாம். இமானின் இசையும் யுகபாரதியின் வரிகளும் படத்துக்கு மிகப்பெரிய பலம். ராமநாதபுரம் பகுதியின் மண்மனம் மாறாமல், பழமை வாதங்களை உடைத்து, நல்லதொரு அரசியலை சொல்லி இருக்கிறது கழுவேத்தி மூர்க்கன்

கழுவேத்தி மூர்க்கன்: காலத்துக்கு தேவையான கருத்தாளுமை

தயாரிப்பு ஒலிம்பியா மூவிஸ்
தயாரிப்பாளர் அம்பேத்குமார்
இயக்கம் சை. கௌதம ராஜ்
இசை டி இமான்
ஒளிப்பதிவு ஸ்ரீதர்
படத்தொகுப்பு நாகூரான் ராமச்சந்திரன்
சண்டை பயிற்சி கே கணேஷ்குமார்
பாடல் வரிகள் யுக பாரதி வீரமணி
நடனம் தினா

அருள்நிதி: மூர்க்கசாமி
துஷாரா விஜயன்: கவிதா
சந்தோஷ் பிரதாப்: பூமிநாதன்
சாயாதேவி: அழகு வள்ளி
முனிஸ் காந்த்: உண்மை
சரத் லோகித்சவா: பிரிதிவ்குமார் ips
ராஜசிம்மன்: முனியராஜ்
யார் கண்ணன்: முத்து வழி விட்டான்
பத்மன்: பீட்டர் ஆண்டனி



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here