சித்தார்த், தியான்ஷா, யோகிபாபு, முனீஸ்காந்த், விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிப்பில், கார்திக் கிரிஷ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் டக்கர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு வாஞ்சிநாதன் முருகேஷன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
பணம்தான் வாழ்க்கை, பணம் இருந்தால் போதும் என்று நினைக்கும் நடுத்தரவர்கத்து இளைஞனும், பணம் என்பது தேவையே இல்லாத ஒன்று, காதல், பாசம், உறவுகள் என்பதெல்லாம் பொய் என்று நினைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்கார பெண்ணும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதே டக்கர் படத்தின் கதை. பணத்தை தேடி ஓடும் நடுத்தர வர்கத்து இளைஞனாக சித்தார்த்தும், உறவுகள், காதல் எல்லாம் பொய் என்று சொல்லும் பணக்கார பெண்ணாக தியான்ஷாவும் நடித்துள்ளனர். கப்பல் படத்தின் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராக நிலை நிறுத்திய கார்திக் கிரிஷ் இப்படத்திலும் தன் முத்திரையை பதித்துள்ளார்.
பென்ஸ் கார் கால்டாக்ஸி ஓட்டும் ட்ரைவர் சித்தார்த், அந்த கால்டாக்சி நிறுவனத்தின் ஓனரான ஒரு சைனிஸ், எப்போதும் கையில் சிகெரெட்டும், மதுக்கோப்பைகளுமாக இருக்கும் ஹீரோயின் என வித்தியாசமான கதைகளம், வித்தியாசமாக திரைக்கதை, ப்ளாக்ஹூமர் என பக்காவாக ரசிகர்களை மகிழ்விக்கிறது டக்கர் திரைப்படம். சித்தார் மீண்டும் பாய்ஸ் பட காலத்துக்கு சென்றது போல் இளமையாக இருக்கிறார். துறுதுறுபாக நடித்திருக்கிறார். ரக்டு ரோலில் அனாயாசமாக நடித்திருக்கிறார் தியான்ஷா. சித்தார்த்தின் நண்பர் பாத்திரத்தில் விக்கி சிரிக்க வைக்கிறார். யோகிபாபுவின் ப்ளாக்ஹூமர் ட்ராக் சிறப்பாக அமைதிருக்கிறது.
இளமை பொங்கும் ஜேனருக்கு ஏற்ற கலர்ஃபுல் கேமிரா மூலம் ரசிகர்களை மகிவித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேஷன். பாடல்கள் ஏற்கனவே ரிப்பீட் மோடில் சமூக வலைத்தளங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும் நிலையில், படம் வெளியான பிறகு மேலும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கிறது நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை.
டக்கர் – டாப் டக்கர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here