Viacom18 இன் தமிழ் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உங்கள் தந்தையர் தின வாரயிறுதியை சிறப்பானதாக மாற்றியமைக்கத் தயாராக உள்ளது. Special Partner – VCARE Trichology Hair Clinic மற்றும் The Eye Foundation கண் மருத்துவமணை ஆகியவற்றுடன் இணைந்து, சபாபதி, 60 வயது மாநிறம், சில நேரங்களில் சில மனிதர்கள் மற்றும் கல்லூரி குமார் போன்ற செண்டிமெண்ட், காமெடி, குடும்ப ஹிட்களை உங்களுக்காக வழங்கவிருக்கிறது கலர்ஸ் தமிழ்.

இயக்குநர் ஆர் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளிவந்த, சபாபதி (சந்தானம்) பேச்சு ஒழுங்கின்மை பிரச்சனையால் பாதிக்கப்படும் ஒரு இளைஞனின் கதை. தனது இந்த பிரச்சனையால், பிறரால் அவமதிக்கப்படுவது, கேலிக்குள்ளாவது என அவர் நிறைய சவால்களை சந்திக்கிறார். இதனால் வேலையில்லாத பட்டதாரியாக சுற்றி வரும் சபாபதி, ஒருபக்கம் சமூக நெருக்கடியையும் மறுபுறம் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற அவரது கண்டிப்பான தந்தையையும் (எம்.எஸ். பாஸ்கர்), எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கிடையில் தனது பால்ய தோழியும் பக்கத்து வீட்டுக்காரருமான சாவித்திரியை (ப்ரீத்தி வர்மா) ஆழமாக நேசித்துவரும் சபாபதி, அவரையும் கரம்பிடித்தாக வேண்டும். அப்படிப்பட்ட தருணத்தில் காலம் அவருக்கு ஒரு பணம் நிரப்பப்பட்ட சூட்கேஸை வழங்குகிறது. அதைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை தொடங்க முயற்சி செய்யும் சபாபதி பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு சொந்தமான அந்த பணம் நிரப்பப்பட்ட சூட்கேஸ் அவரது வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப்போடுகிறது. இந்த பெரிய சிக்கலில் இருந்து தப்பித்து சபாபதி தனது இயலாமையை எதிர்த்து வெல்வாரா? தனது தந்தையிடம் தன்னை நிரூபித்துக் காட்டுவாரா?
தனது காதலில் வெற்றியடைவாரா? என்பதை காண சபாபதி திரைப்படத்தை இந்த ஞாயிறு (ஜூன் 18) மதியம் 1 மணிக்கு கலர்ஸ் தமிழில் உங்கள் பெற்றோருடன் கண்டு மகிழுங்கள்.

இசைஞானி இளையராஜாவின் இசையில், இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்த “60 வயது மாநிறம்” அப்பா-மகனுக்கு இடையேயான மென்மையான உறவைப் பற்றிய பேசும் உணர்வுபூர்வமான திரைப்படமாகும். சிவா (விக்ரம் பிரபு), ஒரு இலட்சியமிக்க மென்பொருள் பொறியாளர், வெளிநாட்டில் IT வேலையில் சேரும் தனது கனவைத் தொடர தனது தந்தையை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகிறார். அப்போது முதியோர் இல்லத்தில் ஏற்படும் ஒரு குழப்பத்தில், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட சிவாவின் தந்தை கோவிந்தராஜன் (பிரகாஷ் ராஜ்) காணாமல் போகிறார்.
அப்படி காணாமல் போகும் கோவிந்தராஜன், ரவுடி ரங்கா (சமுத்திரக்கனி) செய்யும் கொலைக்குற்ற சம்பவத்தை நேரில் பார்த்துவிடுகிறார்.
இப்போது ரங்காவின் முதலாளி, அந்த கொலையின் சாட்சியான கோவிந்தராஜனையும் கொன்றுவிடும்படி கட்டளையிடுகிறார். ஆனால் ரங்கா அவரைக் கொல்வதற்குப் பதிலாக, கோவிந்தராஜனின் கண்கள் வழியாக வாழ்க்கையின் மென்மையான பக்கங்களை பார்க்கிறார் பின்னர் அவரோடு நண்பராகிறார். மறுபுறம் சிவா தனது தந்தையைத் தேடும் பணியில் தீவிரமாக இருக்கும் போது மனநல மருத்துவர் டாக்டர் அர்ச்சனாவை (இந்துஜா) சந்திக்கிறார். அவரின் உதவியுடன் சிவா தனது அப்பாவை கண்டுபிடிப்பாரா?
குற்ற உணர்வு, தவிப்பு, மன்னிப்பு, மனம் திருந்துதல், என மனித மனத்தின் உணர்வுப்பூர்வமான பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் “60 வயது மாநிறம்” படத்தை இந்த ஞாயிறு (ஜூன் 18) பிற்பகல் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்த “சில நேரங்களில் சில மனிதர்கள்” – காலமும் சூழலும் மனிதர்களை எப்படி ஆட்டுவிக்கிறது என்பதை மனித உளவியல் அடிப்படையில் பேசும் ஒரு உணர்வுப்பூர்வமான திரைப்படம்.
மொபைல் போன் விற்கும் கடையில் வேலைப்பார்க்கும் விஜயகுமார் (அசோக் செல்வன்), தாயை இழந்தவர். அவரது தந்தை பணி ஓய்வுப்பெற்ற செல்வராஜ் (நாசர்) மகன் மீது அளவற்ற அன்பு காட்டுபவர். மகனின் திருமண பத்திரிக்கையை கொடுக்கப்போகும் வழியில் ஒரு விபத்தில் இறந்துப்போகிறார். அந்த மரணத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ மூன்று இளைஞர்கள் காரணமாகின்றனர். விஜயகுமார் உட்பட வெவ்வேறு வாழ்க்கையை வாழும் இந்த மூவரையும் ஒரு மரணம் எப்படி தங்கள் தவறுகளிலிருந்து திருத்துகிறது என்பதே இந்தப்படம். விஜயகுமாராக அசோக் செல்வன், செல்வராஜ் வேடத்தில் நாசர், ராஜசேகராக கே.மணிகண்டன், பிரதீஷாக அபி ஹாசன், மலராக ரெய்யா, அறிவழகனாக கே.எஸ்.ரவிக்குமார், கயலாக ரித்விகா, ரித்துவாக அஞ்சு குரியன் நடித்திருக்கும் இந்த சில நேரங்களில் சில மணிதர்களை ஞாயிறு மாலை 6:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காலேஜ் குமார். மகன்களை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என கனவு காணும் அப்பாக்களுக்கும், அவர்களின் கனவை அசட்டை செய்யும் மகன்களுக்கும் இடையே நடக்கும் உணர்வு போராட்டம் தான் இந்த படம். தனது அலுவலகத்தில், தன்னுடைய உயர் அதிகாரியால், வெறும் பியூன் தானே நீ ! என் அசிங்கப்படுத்தப்படும் திருக்குமரன்(பிரபு) தனது மகனை எப்படியாவது அந்த உயர் அதிகாரியின் பதவியில் உட்கார வைப்பேன் என சபதம் எடுக்கிறார். ஆனால் மகனோ, பொறுப்பில்லாமல் நடந்ததால் கல்லூரியை விட்டு இடைநீக்கம் செய்யப்படுகிறார். எப்படியாவது எடுத்த சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அப்பவே கல்லூரிக்கு சென்று படிக்கிறார். அவரது சபதம் நிறைவேறியதா என்பதே மீதி கதை. படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை இந்த படம் மீண்டும் ஒரு முறை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. தனது விருப்பத்தை நிறைவேற்ற போராடும் ஒரு தந்தையின் கதையான இந்த “காலேஜ் குமார்” திரைப்படத்தை இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் கண்டு மகிழுங்கள்.

ஜூன் 18, ஞாயிற்றுக்கிழமை, உங்கள் தந்தையர் தின வார இறுதியை மகிழ்ச்சிகரமானதாக மாற்ற உங்கள் பெற்றோருடன் இணைந்து கலர்ஸ் தமிழைக் காண தவறாதீர்கள்.
கலர்ஸ் தமிழ் இப்பொழுது சன் டைரக்ட் (CH NO 128), Tata Sky (CHN NO 1515), Airtel (CHN NO 763), Dish TV (CHN NO 1808) மற்றும் Videocon D2H (CHN NO 553) – என அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் DTH தளங்களிலும் கிடைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here