யூடியூப் பிரபலங்களான நாகேந்திர பிரசாத், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், சேட்டை ஷெரீஃப், ராம் நிசாந்த், ஆர்ஜே விக்னேஷ், ஆகியோருடன், அபிராமி, அம்மு அபிராமி, சுப்பு பஞ்சு, வினோதினி, போஸ் வெங்கட் ஆகிய திரைப்பிரபலங்கள் நடித்து வெளியாகி இருக்கும் படம் பாபா ப்ளாக் ஷீப். இப்படத்தை புட் சட்னி ராஜ்மோகன் இயக்கியுள்ளார். சுதர்சன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
80ஸ் கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் பள்ளிப்பருவ படங்களை பல முறை பார்த்திருந்தாலும், 2k கிட்ஸ்களின் பள்ளிப்பருவ படத்தை பார்க்கும் போது, கடந்த அரை நூற்றாண்டு கிட்ஸ் அனைவருக்கும் தங்களின் பள்ளிப்பருவத்தை ஞாபகப்படுத்தும்படி, இளமை ததும்பும் படத்தை கொடுத்ததற்காக இயக்குனர் ராஜ்மோகன் அவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
ஒரே கேம்பஸ்ஸில் பெர்லின் சுவர் போல் இருந்த சுவர் உடைக்கப்பட்டு, கோ எட் பள்ளியும், பாஸ்ய் பள்ளியும் ஒன்றிணைய இரு மாணவ கூட்டத்துக்கும் கடைசி பெஞ்சை பிடிப்பது யார் என்ற போட்டியில் நடக்கும் அதிரி புதிரி கலவரங்கள்தான் பாபா ப்ளாக் ஷீப் படத்தின் கதை. நடிகர்களை வெறும் யூடியூப் பிரபலங்கள் என்று ஒதுக்கி விட முடியாத அளவுக்கு மிகச் சிறபாக நடித்துள்ளனர். மிகச்சிறந்த திரைக்கதை, அடுத்தடுத்து வரும் சுவாரஸ்ய காட்சிகள் என படம் பார்க்கும் அனைவரையும் பள்ளிப்பருவத்துக்கு கொண்டு செல்கிறது படம். வெறும் ஆட்டம் பாட்டம் என்று இல்லாமல் ஒரு நல்ல மெஜேஜையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அபிராமி, சுப்பு பஞ்சு என அனைவரின் காதாபாத்திரங்களும் மனதில் பதிகின்றன.
படத்தின் மிகப்பெரிய பலம் என்று சுதர்சன் ஸ்ரீனிவாசின் ஒளிப்பதிவை சொல்ல்லாம், கேமிராவில் இளமை பொங்குகிறது. அதே போல் சந்தோஷ் தயாநிதி அவர்களின் இசை படத்துக்கு மேலும் இளமை கொண்டாட்டத்தை சேர்த்திருக்கிறது. படம் முழுக்க புதுமை நிறைந்திருப்பது சிறப்பு. தமிழ் திரையுலகில் இதுவரை வெளியான பள்ளிப்பருவ படங்களை பட்டியலிட்டால் அதில் பாபா ப்ளாக் ஷீப் படத்துக்கும் ஒரு முக்கிய இடம் இருக்கும்.
பாபா ப்ளாக் ஷீப்: இளமைக் கொண்டாட்டம்