The Dream Team! Om Raut & Prabhas join hands with Bhushan Kumar for a Classic Epic Drama, Adipurush!

Bhushan Kumar, CMD of T-Series, Om Raut, the director of Tanhaji – The Unsung Warrior & Prabhas, the superstar along with Retrophiles, come together for a magnum opus 3D feature film – Adipurush! A screen adaptation of the Indian epic that revolves around the triumph of good over evil.

Om Raut, founder of the production house Retrophiles & the dynamic director of the visual spectacle Tanhaji, envisions Adipurush to be a no holds barred production with lavish plans, excellent action sets & unparalleled VFX work. Backing him is Bhushan Kumar (T-Series), who partners with Retrophiles in bringing his vision on screen. After the mega success of Bahubali Prabhas is getting geared up to play this Epic Character.

This Om Raut’s Magnum Opus based on the most popular chapter of Indian culture will be shot bilingual in Hindi and Telugu. The 3D extravaganza will have a humongous release with the film dubbed in Tamil, Malayalam, Kannada and several other foreign languages. Talks are underway with ‘Bollywood’s Biggest Bets’ to play the role of the antagonist in the film & we can expect an announcement very soon!

Talking about ‘Adipurush’ Prabhas said ‘Every role and every character come’s with its own challenges, but portraying a character like this comes with tremendous responsibility and pride. I am very excited to portray this character of our Epic specially the way Om has designed it. I am sure the youth of our country will shower all their love on our film.’

Bhushan Kumar, who says this film is close to him, shares, “Every project we produce strikes a chord with us, but when Om narrated the script of ‘Adipurush’, I knew I am not missing the opportunity to work on this dream project. Just like my father, my family and I closely believe in our tales and history, we have grown up listening to them since we were kids. I instantly knew I am going to be a part of this magnum opus film. The audience should get ready to experience a story they believe in, on the big screen with spectacular visuals & magnanimous characters.”

Om Raut expresses ‘I am grateful to Prabhas for accepting the part and my vision and Bhushanji for his unconditional support to realise my dream project. We embark on this journey with tremendous passion and pride and promise our audience an experience like never before.’

Adipurush will be Prabhas’ third film with Bhushan Kumar after Saaho and Radhe Shyam and his first film with the Director Om Raut. The trio will certainly prove to be a formula of success!

The film produced by Bhushan Kumar, Krishan Kumar, Om Raut, Prasad Sutar & Rajesh Nair is currently in the pre-production stage and is expected to go on floors in 2021 and hit the marquee with a massive release in 2022.

அதிரடி இயக்குநர் ஓம் ரவாத்தும் அதிரிபுதிரி ஆக்ஷன் ஹீரோ பிரபாஸும் பூஷன்குமாருடன் கைகோர்த்துக் களம் இறங்கும் அதிசயம் நிகழப்போகிறது! ‘ஆதிபுருஷ்’ என்ற பிரம்மாண்டமான அற்புத வரலாற்றுத் திரைப்படக் காவியத்துக்காக உருவாகி இருக்கிறது இந்த மெகா கூட்டணி!
டி- சீரிஸின் தலைமை நிர்வாக இயக்குநரான பூஷன் குமார், ‘டன்ஹாஜி – தி அன்சங் வாரியர்’ திரைப்பட இயக்குநர் ஓம் ரவாத், சூப்பர் ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் ரெட்ரோஃபிலிஸ் நிறுவனந்த்துடன் இணைந்து உருவாக்கும் மாபெரும் வரலாற்றுச் சாஸனம்தான் 3D தொழில்நுட்பத்தில் தயாராகும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம்! இது இந்திய வரலாற்றுப் பின்னணியைத் தழுவி, அநீதிக்கு எதிரான நியாயத்தின் போராட்டத்தை மையமாகக்கொண்டு பின்னிப் பிணையப்பட்ட உன்னதப் படைப்பு!
கண்ணுக்கு விருந்தான டன்ஹாஜியை இயக்கிய அதிரடி இயக்குநர் ஓம் ரவாத், ரெட்ரோஃபிலிஸ் அமைப்பின் நிறுவனர் ஆவார். இவரது இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ், வானமே எல்லையாகக் கொண்ட வண்ணக் காவியம்; ஏராளமான பொருட் செலவில், உன்னதமான படைப்பாற்றல் மிக்க பின்னணிகளுடனும், இணையற்ற VFX தொழில்நுட்பத்துடனும் மகிழ்விக்கபோகிறது.
ரவாத்துக்கு உறுதுணையாக இருப்பவர் பூஷண்குமார் (டி சீரிஸ்). ரெட்ரோஃபிலிஸ் நிறுவனத்துடன் இணைந்து, தமது கனவுகளுக்குத் திரை வடிவம் அளிக்கிறார்.
பாகுபலி அளித்த மாபெரும் வெற்றிக்குப் பின்னர், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பாத்திரத்தை ஏற்று பிரபாஸ் சிறப்பிக்கிறார்.
ஓம் ரவாத்தின் இந்த மாபெரும் திரைக் காவியம், இந்தியக் கலாசாரத்தின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு, ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படும். 3D தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் இந்த பிரம்மாண்டப் படைப்பு தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு கோலாகலமாக வெளியிடப்படும். பாலிவுட்டைக் கலக்கும் பெரும் புள்ளிகளில், வில்லனாக இந்தப் படத்தில் யார் நடிக்கப்போகிறார் என்பது குறித்தான பரபரப்பான யூகங்கள் திரையுலக வட்டாரத்தில் அலையடிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்!
‘ஆதிபுருஷ்’ படம் பற்றி பிரபாஸ் என்ன சொல்கிறார்?
“ஒவ்வொரு வேடமும், ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கான சவால்களைக் கொண்டிருக்கும். ஆனால் இதில் உள்ளதுபோல ஒரு பாத்திரத்தைச் சித்தரிப்பது, எராளமான பொறுப்பு மற்றும் பெருமையைத் தருவதாகும். நமது வரலாற்றுப் பாத்திரத்தைப் பிரதிபலிப்பது எனக்குப் பெருமளவு உற்சாகத்தை அளிக்கிறது. குறிப்பாக ஓம் இதை வடிவமைத்திருக்கும் விதம் அதிசயப்படவைக்கிறது. நமது நாட்டு இளைஞர்கள அனைவரும் தங்களது பேரன்பை எங்கள் திரைப்படத்தின் மீது பொழிவார்கள் என்பது நிச்சயம்!”

இந்தப் படத்தைத் தமக்கு மிக நெருக்கமான ஒன்றாக உணர்வதாக பூஷண்குமார் சொல்கிறார். மேலும், “நாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு படைப்பும் எங்கள் இதய வீணையின் நரம்பை மீட்டுவதாகவே இருக்கும். ‘ஆதிபுருஷ்’ கதையை ஓம் என்னிடம் சொன்னபோது, இந்த கனவுப் படைப்பில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை நான் இழந்துவிடக்கூடாது என்றே உணர்ந்தேன். என் தந்தையைப் போலவே நானும் என் குடும்பத்தினரும் நமது பாரம்பரியக் கதைகள் மற்றும் வரலாறு ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். குழந்தைப் பருவத்தில் இருந்தே அது போன்றவற்றைக் கேட்டு வளர்ந்தவர்கள். கதையை ஓம் சொன்னவுடனே இந்த வரலாற்றுக் காவியச் சித்திரத்தில் நானும் ஓர் அங்கமாக இருப்பேன் என்பதை உணர்ந்துகொண்டேன். தாங்கள் நம்பும் ஒரு வரலாற்று நிகழ்வை கண்கவர் காட்சிகளோடும், மாபெரும் பாத்திரப் படைப்புகளோடும் பெரிய திரையில் கண்டு அனுபவிக்க ரசிகர்கள் தயாராகலாம்.”
ஓம் ரவாத் பேசும்போது, “என்னுடைய சிந்தையில் பதிந்திருந்த இந்தப் பாத்திரத்தை ஏற்கச் சம்மதித்த பிரபாஸுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். என்னுடைய கனவுப் படைப்பை நனவாக்க, நிபந்தனையற்ற ஆதரவை அளித்த பூஷன் அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகட்டும். ஏராளமான ஈடுபாட்டோடும் பெருமையோடும் இந்தக் கலைப் பயணத்தை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்; இது போன்றதொரு அனுபவத்தைத் தாங்கள் இதுவரைபெற்றதில்லை என்ற உணர்வை எங்கள் ரசிகர்கள் நிச்சயம் அடைவார்கள் என்ற உறுதியை நாங்கள் அளிக்கிறோம்” என்றார்.

சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களுக்குப் பிறகு பூஷண்குமாருடன் பிரபாஸ் இணையும் மூன்றாவது திரைப்படம்தான் ‘ஆதிபுருஷ்’. ஓம் ரவாத்துடன் பிரபாஸ் கைகோர்க்கும் முதல் படமும் இதுதான். இந்த மூவர் கூட்டணி, ஒரு வெற்றிக்கூட்டணி என்பதை நிச்சயம் நிரூபிக்கும்!
பூஷண்குமார், கிருஷ்ணன்குமார், ஓம் ரவாத், பிரசாத் சுடர் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தத் திரைப்படம் தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய கட்டத்தில் இருக்கிறது. 2021ஆம் ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் ஆரவாரமாகத் திரையரங்குகளுக்கு வரும்.


இது ஒரு கனவு டீம்! க்ளாசிக் காவியமான ஆதிபுருஷ் திரைப்படத்துக்காக ஓம் ராவத் மற்றும் பிரபாஸ் இருவரும் பூஷன் குமாருடன் இணைகின்றனர்.

டி சீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பூஷன் குமார், தன்ஹாஜி – தி அன்சங்க் வாரியர் பட இயக்குநர் ஓம் ராவத், ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் சூப்பர்ஸ்டார் பிரபாஸ் ஆகியோர் ஆதிபுருஷ் என்ற பிரம்மாண்ட 3டி படத்தில் இணைகின்றனர். இது தீமையை வெற்றிகொள்ளும் நன்மையை பற்றிய ஒரு இந்திய காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படம்.

ரெட்ரோஃபைல்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனரும் தன்ஹாஜி திரைப்படத்தின் இயக்குநருமான ஓம் ராவத், ஆதிபுருஷ் படத்தை இயக்குவதற்கான அற்புதமான ஆக்‌ஷன் செட்களும், நிகரில்லாத கிராபிக்ஸ், எந்தவித தடைகளும் இல்லாத உயர்தர திட்டங்களையும் கொண்டுள்ளார். அவரது நோக்கத்தை திரையில் கொண்டுவருவதற்காக பூஷன் குமார் (டி சீரிஸ்) அவருடன் இணைகிறார். பாகுபலி திரைப்படத்தில் மெகா வெற்றிக்கு பிறகு இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபாஸ் தயாராகி வருகிறார்.

இந்திய கலாச்சாரத்தின் மிகப் பிரபலமான அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பிரம்மாணட படைப்பு இந்தி மற்றும் தெலுங்கில் படமாகிறது. இந்த 3டி கொண்டாட்டம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட்டின் மிகப்பெரும் பிரபலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கான அறிவிப்பை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஆதிபுருஷ் படத்தை பற்றி பிரபாஸ் கூறும்போது, ‘ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சவால்கள் நிறைந்தது, ஆனால் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை திரையில் கொண்டுவருவது மிகவும் பொறுப்புமிக்கது மற்றும் பெருமைக்குரியது. இயக்குநர் ஓம் விசேஷமாக வடிவமைத்துள்ள இந்த காவிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். நம் நாட்டின் இளைஞர்கள் தங்கள் அன்பை இப்படத்தின் மீது பொழிவார்கள் என்று உறுதியாக கூறுகிறேன்.’ என்றார்.

பூஷன் குமார் கூறும்போது, ‘இப்படம் என் இதயத்துக்கு நெருக்கமானது. நாங்கள் தயாரிக்கும் எல்லா படங்களும் எங்களோடு உணர்வுரீதியாக இணைந்திருக்கின்றன. ஆனால் ஓம் ஆதிபுருஷ் படத்தின் கதையை என்னிடம் கூறும்போது, ‘இந்த கனவு திட்டத்தில் பணியாற்றும் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்று எனக்கு தோன்றியது. என்னுடைய தந்தை மற்றும் என் குடும்பத்தினரைப் போல நமது வரலாற்றின் மீதும், புராணங்களின் மீதும் எனக்கும் அதீத நம்பிக்கை உள்ளது. சிறு வயது முதலே அவற்றை கேட்டுத்தான் நாங்கள் வளர்ந்தோம். இந்த பிரம்மாண்ட படத்தின் நானும் ஒரு அங்கமாக இருக்கப் போகிறேன் என்று உடனடியாக எனக்கு தோன்றியது. தாங்கள் நம்பும் ஒரு கதையை பெரிய திரையில் அற்புதமான காட்சிகளுடனும், மகத்துவமான கதாபாத்திரங்களுடனும் காண பார்வையாளர்கள் தயாராக வேண்டும்.’ என்றார்.

இது குறித்து ஓம் ராவத் கூறும்போது, ‘இந்த படத்தில் நடிக்கவும் என்னுடைய நோக்கத்தையும் ஒப்புக்கொண்ட பிரபாஸுக்கும், என்னுடைய கனவு திரைப்படத்தை வெளியிட நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கிய பூஷன் அவர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். மிகப்பெரிய கனவுகளோடும், பெருமிதத்தோடும், இதற்கு முன் பார்த்திராத ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தரும் உறுதியோடும் இந்த பயணத்தை தொடங்குகிறோம்’ என்றார்.

சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்களுக்கு பிறகு பூஷன் குமார் பிரபாஸ் இணையும் மூன்றாவது படம் ஆதிபுருஷ். இயக்குநர் ஓம் ராவத்துடன் இணையும் முதல் படம். இந்த மூவர் கூட்டணி வெற்றிக்கான இலக்கணத்தை நிச்சயம் உருவாக்கும்.

பூஷன் குமார், க்ரிஷான் குமார், ஓம் ராவத், பிரசாத் சுடார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றனர். 2021ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 2022ஆம் ஆண்டு பிரம்மாண்ட முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here