இளைய தலைமுறைக்கும் ,முதியதலைமுறைக்கும் இடையே உள்ள இடைவெளியை இட்டு நிரப்பும் நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியின் “தேன்கிண்ணம்”. இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவருகிறது. இதில் பல்வேறு பழம்பெறும் திரை நட்சத்திரங்கள் பங்கேற்று தங்கள் திரையுலக அனுபவங்களையும், தங்களுக்கு பிடித்த பாடல்களையும் நேயர்களோடு பகிர்ந்து கொண்டு வருகின்றனர். பழைய திரைப்பட பாடல் ரசிகர்களிடம் தேன்கிண்ணம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்நிலையில், தற்போது இந்நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் நீட்டிக்கப்பட்டு ‘ஞாயிறு தேன்கிண்ணம்’ என்ற தலைப்பில் காலை 8:00 மணிமுதல் 9:00 மணிவரை ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் 1960,70,80,90களில் வெளிவந்த ஹிட்டான பாடல்களுடன், அவை குறித்த அறியப்படாத பின்னணி தகவல்களும் இடம்பெறுகின்றன. நேயர்களுக்கு இசை விருந்தாக அமையும் இந்நிகழ்ச்சியை உமா மற்றும் சூர்யா தொகுத்து வழங்குகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here