Actor Nasser, President of Nadigar Sangam (SIAA) today has made his clarifications from Annapoorna Studios in Hyderabad, regarding some baseless rumour doing rounds in a few media channels

He says, “There is a piece of wrong news going around the media that actors from languages will not be encouraged in the Tamil industry. It’s misinterpreted information. If this kind of resolution is taken in the Tamil film industry, I will be the first to raise my voice against it. It’s because, we are now in the era of Pan-Indian films, and our Indian industry is getting globalized. Now films need actors, technicians, and talents from all places. Eventually, at this point in time, nobody will make such decisions. To protect the workers in the Tamil film industry. The FEFSI has decided that the works have to be engaged in films that are shot within Tamil Nadu’s boundaries, emphasizing the workers’ rights and protection.

The Tamil film industry has a long tradition of encouraging talents from other industries. It has been evident from the times of the iconic Ranga Rao, Savithri, and many others. I humbly request that my friends and brothers not take these baseless rumours seriously. We will make films together and take them globally. We can do it and have already started progressing. So let us stay united and make great films. Thank you!”

சில மீடியாக்களில் வெளியாகியுள்ள ஆதாரமற்ற, வதந்தி குறித்து தெளிவுபடுத்தும் விதமாக தென்னிந்திய நடிகர்சங்க (SIAA) தலைவர் நடிகர் நாசர் ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இருந்து விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ;

“மற்ற திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தமிழ் திரையுலகில் பணிபுரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஒரு செய்தி மீடியாக்களில் பரவிக் கொண்டிருக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான செய்தி. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் தமிழ் திரையுலகில் இருந்து இதற்கு எதிராக குரல் எழுப்பும் முதல் ஆளாக நான் இருப்பேன்.

பான் இந்தியா, குளோபல் என சினிமா விரிவடைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், மற்ற மொழிகளிலிருந்து நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேவை இருக்கிறது. அதனால் இந்த சூழ்நிலையில் யாரும் இப்படிப்பட்ட ஒரு தீர்மானத்தை எடுக்க மாட்டார்கள் என நான் நினைக்கிறேன்

தமிழ் திரையுலகில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஃபெப்சி தலைவர் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் படங்களை தமிழகத்திற்குள்ளேயே எடுக்க வலியுறுத்துவது போன்ற சில சீரியஸான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அது தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதே தவிர கலைஞர்களின் திறமை மற்றும் நடிகர்களை பற்றியது அல்ல.

எஸ்.வி ரங்காராவ், சாவித்திரி, வாணி ஸ்ரீ போன்ற மற்ற திரையுலகில் இருக்கும் திறமையாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்று அன்பும் மரியாதையுடனும் கவனிக்கும் அளவிற்கு தமிழ் திரையுலகம் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டது. அன்பான சகோதரர்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் இந்த செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்.. உலக அளவில் அதை கொண்டு செல்வோம். நம்மால் செய்ய முடியும் நாம். அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறோம். அதனால் ஒன்றாக இணைந்து படங்களை உருவாக்குவோம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here