இந்திய சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் சத்யஜித் ரே, ரித்விக் காட்டக், மிருணாள் சென். இந்த மூன்று பெங்காலி இயக்குனர்களின் பெயரில் ஆண்டு தோறும் சத்யஜித் ரித்விக் மிருணாள் சர்வதேச திரைப்பட விழா கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா நிறைவு நிகழ்ச்சியில் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஜியா எழுதி, இயக்கியுள்ள கள்வா குறும்படத்துக்கு சிறந்த ரொமான்டிக் திரில்லர் படத்துக்கான விருது வழங்கப்பட்டது. இதை ஜியா பெற்றுக்கொண்டு பேசும்போது, ‘எல்லாம்வல்ல இறைவனுக்கு நன்றி, எனது குடும்பத்தாருக்கும், கள்வா படக்குழுவினருக்கும் சத்யஜித் ரித்விக் மிருணாள் திரைப்பட விழா குழுவினருக்கும் நன்றிகள்’ என்றார். தனது பேச்சை முடிக்கும்போது, ‘எல்லா புகழக்கும் இறைவனுக்கே’ என தமிழில் ஜியா கூறும்போது, கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் 643 படங்கள் போட்டியிட்டன. இதில் விருதுக்காக 85 படங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் இந்தி, பெங்காலி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, மராத்தி, உருது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்கள் அடங்கும். இதில் ஒரு படமாக ‘கள்வா’ தேர்வானது குறிப்பிடத்தக்கது.

கிங் பிக்சர்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள ‘கள்வா’ படம், இதுவரை 35 ஆயிரம் பார்வையாளர்களை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. திரையுலகை சேர்ந்த பலர், இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here