குடும்பங்கள் கொண்டாடும் மெகாத்தொடர்களை ஒளிபரப்பி வரும் கலைஞர் தொலைக்காட்சி, அடுத்ததாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த விகடனின் “கோலங்கள்”, “தென்றல்” மற்றும் “அழகி” ஆகிய மூன்று மெகாத்தொடர்களை மெருகேற்றி ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறது.

இதில் வி.சி.ரவி, இனியன் தினேஷ் இயக்கத்தில் விஜி சந்திரசேகர், கமல் தீப், சோனியா, இளவரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “அழகி” மெகாத்தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

திருச்செல்வம் இயக்கத்தில் தேவயானி, தீபா வெங்கட், அஜய் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “கோலங்கள்” மெகாத்தொடர் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

எஸ்.குமரன் இயக்கத்தில் ஸ்ருதி ராஜ், தீபக் டிங்கர், ஹேமலதா, சுசேன் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள “தென்றல்” மெகாத்தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here