CURTAIN RAISER – The Equalizer trilogy started with The Equalizer (2014) followed by The Equalizer 2 (2018). The Equalizer 3 is the 3rd and final instalment of the series. Denzel Washington played the lead in all the 3 films and Antonie Fuqua is the director of all the 3 films…
SYNOPSIS – Since giving up his life as a government assassin, Robert McCall (Denzel Washington) has struggled to reconcile the horrific things he’s done in the past and finds a strange solace in serving justice on behalf of the oppressed. Finding himself surprisingly at home in Southern Italy, he discovers his new friends are under the control of local crime bosses. As events turn deadly, McCall knows what he has to do: become his friends’ protector by taking on the mafia.
CREDITS –
Directed by-Antonie Fuqua
Based on the televise Based on the television series created by Michael Sloan and Richard Lindheim Cast- Denzel Washington, Dakota Fanning, Sonia Ammar, Remo Girone & David Denman
Cinematography – Robert Richardson
Music- Marcelo Zarvos.
Sony Pictures Release
THE EQUALIZER 3
தயாரிப்பு -Sony Pictures
வெளியீடு -September 1st
ஒரு நடிகரும் ஒரு இயக்குனரும் ஒரு திரைக்கதையை மய்யமாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கி அப்படம் வெற்றி பெரும்பொது , மீண்டுமொருமுறை அதே கதையின் தொடர்ச்சியாக வேறொரு திரைக்கதையை உருவாக்கி மீண்டுமொருமுறை வெற்றி பெருவெதென்பது
சிறப்புதானே! இவ்விருவர் அணி மூன்றாம் முறையும் முந்தய இரு படங்களின் தொடராக ஒரு படத்தை உருவாக்கி வெற்றி காண்பதென்பது மகத்தான வெற்றிதானே!
மும்முறை, இந்த சாதனையை இணையாக நின்று நிகழ்த்தியிருப்பவர்கள், நடிகர் Denzel Washington மற்றும் இயக்குனர், Antonie Fuqua .
இந்த கூட்டணி, 2014 இல் The Equalizer என்கிற ஒரு படத்தை, ஒரு தொலைக்காட்சி தொடரின் திரைவடிவமாக உருவாக்கி வெற்றிகண்டார்கள்.
மீண்டும், 2018 இல், இதே கூட்டணியில், The Equalizer 2 வெளியாகி மீண்டும் பெரு வெற்றிகொண்டது!
இப்போது வெளியாகியிருப்பது The Equalizer படத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி பாகம்.
Robert McCall தனது பணி ஓய்வினை அமைதியாக எந்தவித இடர்பாடுமின்றி நிம்மதியதாக கழிக்க முற்பட்டு இத்தாலிக்கு வருகிறார்.
அவரது உறைவிடத்திற்கு அருகில் உள்ள ஓர் இடத்திலிருந்து செயல்பட்டு வரும் ஒரு நாசகார கும்பல், இப்பகுதியில் வாழும் மக்களை அசத்துருத்தி தாண்டல் வசூலித்து வருகிறது!
தனது ஓய்வு நிலையிலிருந்து வெளிவந்து மீண்டும் ஒரு முறை அதிரடி வாழ்க்கைக்கு திரும்பவேண்டிய தருணம் வந்து விட்டது என்பதை உணரவரும் Robert மீண்டும் கோதாவில் இறங்குகிறார்!
பொதுவாக ஆக்ஷன் படங்களென்றால் இக்காட்சிகள் விறுவிறுப்பாக விரைந்து செல்லும்! ஆனால், இப்பட ஆக்ஷன் காட்சிகள் அந்த ரகமல்ல!
சிந்தாமல், சிதறாமல், ஆழமாகவும், அழுத்தமாகவும் அமுலாகிற ஆக்ஷன் காட்சிகள்!
சமூக பிரஞையுடன் செயல்படும் கதாநாயகனாக Denzel Washington படம் பார்ப்போரை கவருகிறார்.
Robert Richardson னின் நேர்த்தியான ஒளிப்பதிவும் Marcelo Zarvos இன் பின்னானி இசைஅமைப்பும் படத்துக்கு பக்க பலம்.
ஆர்பாட்டமோ ஆரவாரமோ இன்றி அமைதியான ஒரு பாணியில் திரைக்கதையை கொண்டுசென்றுள்ள இயக்குனர் Antonie Fuqua பாராட்டுக்குரியவர்.