~ 11 மொழிகளில் இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலவசமாக வழங்குகிறது ஜியோசினிமா
~ கலர்ஸ் தமிழ், கலர்ஸ் பங்களா சினிமா, கலர்ஸ் கன்னடா சினிமா, கலர்ஸ் சினிபிளக்ஸ் சூப்பர்ஹிட்ஸ், ஸ்போர்ட்ஸ்-18 1 எஸ்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 எச்டி தொலைக்காட்சிகளில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் / ஆஃப்-லைன் டி.வி. இலக்குகளிலும் ஒளிபரப்பாகும்~
~ சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், ஆகாஷ் சோப்ரா, ஹனுமா விஹாரி, கிரண் மோரே, அனிருத்தா ஸ்ரீகாந்த், சரண்தீப் சிங் ஆகியோர் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர் ~
மும்பை, செப்டம்பர் 13, 2023 : உள்நாட்டுப் போட்டிகளை, பிசிசிஐ இன்டர்நேஷனலிடமிருந்து பிரத்யேகமாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்ற பின்னர் இந்தியா, ஆஸ்திரேலியா இடையே செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் திட்டம் குறித்து வயாகாம் 18 இன்று அறிவித்துள்ளது.
முதலாவது சர்வதேச தொடரை ஜியோசினிமாவில் 11 மொழிகளில் இலவசமாக வழங்குகிறது ஜியோசினிமா. டி.வி.யிலும், செல்போன் செயலி மூலமாகவும் போட்டிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த கிரிக்கெட் தொடர் கலர்ஸ் தமிழ் (தமிழ்), கலர்ஸ் பங்களா சினிமா (பெங்காலி), கலர்ஸ் கன்னடா சினிமா (கன்னடா), கலர்ஸ் சினிபிளக்ஸ் சூப்பர்ஹிட்ஸ் (ஹிந்தி), ஸ்போர்ட்ஸ்-18 1 எஸ்டி, ஸ்போர்ட்ஸ் 18-1 எச்டி (ஆங்கிலம்) ஆகிய 8 தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை விரைவில் நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தத் தொடர் முழுவதும் கிரிக்கெட் நிபுணர்களின் சிறப்பான கிரிக்கெட் வர்ணனையும் உண்டு. சுரேஷ் ரெய்னா, கேதார் ஜாதவ், ஆகாஷ் சோப்ரா, நிகில் சோப்ரா, அனிருத்தா ஸ்ரீகாந்த், அபிநவ் முகுந்த், ஹனுமா விஹாரி, வெங்கடபதி ராஜு, சரண்தீப் சிங், ரிதீந்தர் சிங் சோதி, ராகுல் சர்மா, விஆர்வி சிங், கிரண் மோரே, ஷெல்டன் ஜாக்சன், ஜதின் பராஞ்ச்பே, ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, வி.ஏ.ஜெகதீஷ் உள்ளிட்டோர் நிபுணர் குழுவில் உள்ளனர்.
டாடா ஐபிஎல் போட்டி-2023 நடைபெற்றபோது அனைத்து சாதனைகளையும் உடைத்து, முன்னோடியில்லாத அளவிலான ஈடுபாடு, பார்வையாளர்கள் மற்றும் ஒத்திசைவை நிறுவிய ஜியோசினிமா(JioCinema), தற்போது பார்வையாளர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த விளையாட்டை இதுவரை கண்டிராத ஜியோசினிமா, டி.வி. வழியாக இலவசமாக வழங்கவுள்ளது வயாகாம் 18. ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 50 ஓவர்கள் ஆட்டத்தை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும்.
இதுகுறித்து வயாகாம்18- ஸ்போர்ட் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அனில் ஜெயராஜ் கூறும்போது, “இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் பார்வையாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டின் புதிய தாயகத்தைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அளிக்கும். மேலும் பொறுப்புணர்வுடன், விளையாட்டை ரசிக்கும் விதத்தில் முன்னோடியான மாற்றத்தை நாங்கள் தொடர்ந்து கொண்டு வருவோம். இதுவரை பார்த்திராத வழிகளில் ரசிகர்கள் மிகவும் விரும்புவதை வழங்குவதே எங்கள் தொடர்ச்சியான முயற்சியாகும். மேலும் டிஜிட்டல் முறையில் தொடர்ந்து லீனியர்/ ஆஃப்லைன் டிவி நிகழ்ச்சிகளை வழங்குவோம். பிசிசிஐ நடத்தும் தொடர்களை இணையற்ற முறையில் வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
ரசிகர்களின் நேரடி பார்வை அனுபவத்தை மேம்படுத்த, இந்தத் தொடர் ஜியோசினிமாவில் 4K வில் ஸ்டிரீம் செய்யப்படும். மேலும் ரசிகர்களுக்கு பிரபலமான கணிப்பு மற்றும் வெற்றிகரமான ரசிகர்களுக்கான போட்டியான ஜீதோ தன் தனா தன்' எனப்படும் நிகழ்ச்சியும் நடத்தப்படும். 2023 டாடா ஐபிஎல்லின் போது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட
ஜீதோ தன் தனா தன்’ நிகழ்ச்சியானது, பல்லாயிரக்கணக்கானோர் 60 ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பரிசுகளை வெல்ல வழிவகுத்தது. இந்த போட்டியானது, நாட்டில் பலர் தங்களது அதிர்ஷ்டம் மூலம் எப்படி கார் வெல்வது என்பது பற்றிய பரபரப்பான கதைகளை உலகுக்கு எடுத்துக்கூறியது.
ஜியோசினிமா செயலியை (ஐஓஎஸ் மற்றும் ஆன்டிராய்ட்) செல்போன்களில் பதிவிறக்குவதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டுகளைத் தொடர்ந்து பார்த்து ரசிக்க முடியும். மேலும், சமீபத்திய புதுப்பிப்பு செய்திகள், செய்திகள், விளையாட்டு ஸ்கோர்கள் மற்றும் வீடியோக்களுக்கு, ரசிகர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் சமூக வலைதளங்களில் Sports18 -ஐ பின்தொடரலாம். மேலும், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் வலைதளங்களில் JioCinema செயலியை பின்தொடரலாம்.
போட்டி அட்டவணை
செப்டம்பர் 22, முதலாவது ஒருநாள் போட்டி, பகல் 12.30, பிசிஏ ஸ்டேடியம், மொஹாலி.
செப்டம்பர் 24, 2-வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, ஹோல்கார் ஸ்டேடியம், இந்தூர்.
செப்டம்பர் 27, 3-வது ஒருநாள் போட்டி, பகல் 12.30, எஸ்சிஏ ஸ்டேடியம், ராஜ்கோட்.
Viacom18 Opens Their Innings as the New Home of Indian Cricket with Three-Match ODI Series against Australia
~ JioCinema to stream the series free across 11 languages ~
~ Colors Tamil, Colors Bangla Cinema, Colors Kannada Cinema, Colors Cineplex Superhits, Sports18 – 1 SD, Sports18 – 1 HD will be linear/ offline TV destinations ~
~ Suresh Raina, Kedar Jadhav, Aakash Chopra, Hanuma Vihari, Kiran More, Anirudha Srikanth, Sarandeep Singh headline the expert panel ~
Mumbai, September 13, 2023: After securing exclusive media rights for BCCI International and Domestic Matches, Viacom18 today announced its plans for the three-ODI series between India and Australia starting September 22.
The first international series in the rights cycle will be presented on JioCinema in 11 languages for free. On linear/ offline TV, the series will be aired live on Colors Tamil (Tamil), Colors Bangla Cinema (Bengali), Colors Kannada Cinema (Kannada), Colors Cineplex Superhits (Hindi), Sports18 – 1 SD, Sports18 – 1 HD (English).
The series is of great significance for both sides as they will look to find momentum leading up to the 50-over World Cup. The expert panel for the series across languages will include Suresh Raina, Kedar Jadhav, Aakash Chopra, Nikhil Chopra, Anirudha Srikkanth, Abhinav Mukund, Hanuma Vihari, Venkatpathy Raju, Sarandeep Singh, Reetinder Singh Sodhi, Rahul Sharma, VRV Singh, Kiran More, Sheldon Jackson, Jatin Paranjpe, Shreevats Goswami, VA Jagadeesh among others.
After shattering all records, and establishing unprecedented levels of engagement, viewership, and concurrency during the TATA IPL 2023, JioCinema will offer viewers their favourite sport in a never-seen-before presentation for free. Viewers will be able to watch the limited-overs action in English, Hindi, Marathi, Gujarati, Bengali, Bhojpuri, Punjabi, Tamil, Telugu, Kannada, and Malayalam.
“The 3-match ODI series between India and Australia will give viewers a peek into inarguably the new home of Indian cricket and with that responsibility, we will continue to bring the paradigm shift in the way sports is consumed,” said Viacom18 – Sports CEO Anil Jayaraj. “It is our constant endeavour to offer fans what they love the most in never-seen-before ways and digital allows us to continuously push the envelope and combined with linear/ offline TV, we will deliver BCCI events on an unparalleled scale.”
To enhance the live-viewing experience, the series will be streamed in 4K on JioCinema and fans will be offered the popular predict and win fan engagement contest Jeeto Dhan Dhana Dhan. Introduced first during the 2023 TATA IPL, Jeeto Dhan Dhana Dhan was a runaway success as tens of thousands won exciting prizes including over 60 contestants driving away a premium hatchback. The contest also brought out stirring stories of how winning the car changed fortunes for many from India’s heartlands.
Viewers can continue to watch their preferred sports by downloading JioCinema (iOS & Android). For the latest updates, news, scores, and videos, fans can follow Sports18 on Facebook, Instagram, Twitter and YouTube and JioCinema on Facebook, Instagram, Twitter and YouTube.
Schedule
Date
Match
Timings
Venue
September 22
1st ODI
12:30 PM
PCA Stadium, Mohali
September 24
2nd ODI
12:30 PM
Holkar Stadium, Indore
September 27
3rd ODI
12:30 PM
SCA Stadium, Rajkot