விஜய். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் லியோ. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா , படத்தொகுப்பு பிலோமின் ராஜ், இப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அதீத எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே வெளியாகி இருக்கும் லியோ, படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இப்படம் லோகேஸ் சினிமாடிக் யுனிவர்சில் இருக்கிறாதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்ததா என்பது பற்றி பார்ப்போம்

இமாச்சல் பிரேதேசத்தில், பனி சூழ்ந்த ஒரு அழகிய சிறு நகரம் ஒன்றில் காஃபி ஷாப் நடத்திவரும் விஜய், அவர் மனைவி த்ரிஷா மற்றும் மகன் மகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அந்த ஊருக்கு வரும் கூலிப்படையை சேர்ந்த மிஷ்கின் டீம் விஜய்யை சீண்ட, அவர்களை சுட்டுக்கொல்கிறார் விஜய். அங்கிருந்து தொடங்குகிறது லியோவின் பயணம். லியோ யார் என்பதை படத்தில் வரும் கதாபாத்திரங்களுடன் சேந்து நாமும் தேடத்தொடங்கிவிடுகிறோம். அடுத்தடுது வரும் நிகழ்வுகள் அனைத்தும் ரசிகர்களை சிட் நுனிக்கு கொண்டுவரும் மூமெண்ட்கள்

காஃபி ஷாப் நடத்தும் பார்திபன் மற்றும் போதை பொருள் உலகின் கொடூர முகம் கொண்ட லியோ ஆகிய இரண்டு பாத்திரங்களிலும் அதகளப்படுத்தி இருக்கிறார் விஜய். குறிப்பாக த்ரிஷா மற்ற்ம் குழந்தைகளுடன் ஒரு நடுத்தர வயது மனிதனாக மனதுக்கு நெருக்கமாக நடித்திருக்கிறார். வனத்துறை அதிகாரி பாத்திரத்தில் கௌதம் மேனன் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குழந்தைத்தனமாக முகத்தில் இவ்வளவு கொடூரத்தை கொண்டுவர முடியுமா? முடியும் என்று மிரட்டி இருக்கிறார் சாண்டி மாஸ்டர், ஜார்ஜ், மிஷ்கின், மன்சூர் அலிகான் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போதே தியேட்டர் அலறுகிறது. சச்சய் தத் மற்றும் அர்ஜுன் வில்லன்களாக மிரட்டி இருக்கின்றனர். த்ரிஷா அழகோ அழகு, அருமையான நடிப்பு, பொறுப்பான அம்மா, அன்பான மனைவி என மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ப்ரியா ஆனந்த்தின் அழகான க்யூட் முகத்தை திரையில் பார்ப்பது ஒரு நல்ல ஃபீல்.

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இப்படமும் இருக்கிறது என்பதை உணர்த்தும் காட்சிகள் ஒவ்வொன்றும் கூஸ்பம்ப் மூமெண்ட், திரைக்கதை, வசனம் என அனைத்திலும் தன்னுடைய முத்திரையை பதித்திருக்கிறார் லோகேஷ். முதல் காட்சியில் இருந்து க்ளைமாக்சிஸ் வரும் அந்த இசைக்கோர்வை வரை நம்ம ஆச்சர்யப் படுத்திக்கொண்டே இருக்கிறார் அனிருத். மனோஜ் பரமஹம்சாவின் கேமிரா இமாசல பிரதேசத்தின் பனிமலைகளையும், போதை கடத்தல் காரர்களின் நிழலுகையும் கச்சிதமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. பிலோமின் ராஜின் எடிட்டிங் நறுக்குத்தெரித்தாற்போல் இருக்கிறது. கார் பைக் சேசிங் காட்சிகளில் பிலோமின் ராஜ் அவர்களின் உழைப்பு தெரிகிறது. எதிர்பார்த்தைவிட அதிகம் கொடுத்திருக்கிறடு லியோ

லியோ: ப்ளட்டி ஸ்வீட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here