Chennai, 5th November 2023: The Marina Beach in Chennai witnessed a heartwarming and magical event on November 5th as Citizen, in collaboration with Disney and BHUMI NGO, distributed 1000 high-quality raincoats and umbrellas to the local community. This event not only provided protection from the impending monsoon season but also symbolized the spirit of giving back and corporate social responsibility (CSR).

The CSR project with BHUMI NGO involved the distribution of 1000 raincoats and umbrellas, strategically designed to cater to different segments of the community.

These contributions made a significant difference in the lives of the beneficiaries:
• Disney Cartoon Type Umbrellas and Raincoats for children brought smiles and comfort to the little ones, ensuring they stay dry and cheerful during the monsoon. A total of 300 children directly benefited from this gesture.

• Raincoats for Roadside vendors in Marina Beach and other locations offered protection to those who make their livelihoods on the streets, enabling 400 vendors to continue their work without disruption.

• Raincoats for sanitation workers, manual scavengers, sewer workers displayed a deep commitment to the welfare of those who keep the city clean and functional. This support directly impacted the lives of 300 workers who work tirelessly for the well-being of the community.

“The Marina Beach event was a significant milestone for Citizen, BHUMI NGO and Disney. It showcased their dedication to not only providing high-quality products but also to giving back to the community. We are immensely proud of the impact this project has made on the lives of the people of Chennai,” said Adil, Marketing Head from Citizen.

The project was met with immense gratitude from the beneficiaries, and their smiles and appreciation were the greatest reward for all those involved.

சென்னை மெரினா கடற்கரையில்

சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள்
1000 பேருக்கு ரெயின் கோட், குடை: சிட்டிசன், டிஸ்னி மற்றும்

பூமி தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கியது

சென்னை, நவ.5-2023: மழை காலம் துவங்கி உள்ள நிலையில் சாலையோர வியாபாரிகள், துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் வகையில் 1000 பேருக்கு தரமான ரெயின் கோட் மற்றும் குடைகளை இன்று சிட்டிசன் அமைப்பு, டிஸ்னி நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவு மற்றும் பூமி தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னை மெரினா கடற்கரையில் வழங்கியது.

சமூக பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக மழை காலத்தில் ஏழை எளிய மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்கள் பணிகளை மேற்கொள்ள அவர்களுக்கு உதவிடும் விதமாக இவை வழங்கப்பட்டதாக இந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக டிஸ்னி கார்ட்டூன் பொறிக்கப்பட்ட குடைகள் மற்றும் ரெயின்கோட்டுகள் 300 பேருக்கு வழங்கப்பட்டன. கார்ட்டூன் படங்களை பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இவை அவர்களிடம் ஒரு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தின.

மேலும் மெரினா கடற்கரை மற்றும் பிற இடங்களில் சாலையோரம் உள்ள வியாபாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மழை காலத்தில் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்கள் பணிகளை தொடர 400 பேருக்கு ரெயின்கோட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் ஓய்வின்றி உழைக்கும் துப்புரவு பணியாளர்கள், கழிவு நீர் அகற்றும் பணியாளர்கள் என தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள 300 பேருக்கும் ரெயின் கோட்டுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய சிட்டிசன் அமைப்பின் மார்க்கெட்டிங் தலைவர் அடில் கூறுகையில், இங்கு, பூமி தொண்டு நிறுவனம் மற்றும் டிஸ்னி உடன் இணைந்து இந்த உதவிகளை செய்வது என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தரமான தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்குவது என்பது சமூக பொறுப்புணர்வுடன் பணியாற்றும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும். இவற்றை பெற்றுக் கொண்ட மக்களின் முகத்தில் நாங்கள் பார்த்த உற்சாகமானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது என்று தெரிவித்தார்.
இவற்றைப் பெற்றுக் கொண்ட மக்கள் இந்த அமைப்புகளுக்கு தங்களின் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here