PVR Pictures to release the movie
Chennai (Dec 7, 2023): The makers of ‘AGHORI’, an edge-of-seat spine-shuddering supernatural thriller, have confirmed that PVR Pictures will release the film on December 15, 2023.
Actor Sidhu, who won the hearts of homes and family crowds with his spellbinding performances in TV serials like Raja Rani and Thirumanam is now embarking on his journey in the movie industry through the movie ‘Aghori’. The film is all set for the worldwide theatrical release on December 15, 2023, and the actor is keeping his fingers crossed, hoping for a good success of this movie.
Sayaji Shinde’s new dimensional avatar in ‘Aghori’ has been shaping up well. Motion Film Picture NIC Suresh K Menon is producing this film with debut filmmaker D.S Rajkumar helming the project. The film revolves around the combat that happens between evil spirits and an Aghori hermit, who is a follower of Lord Shiva. This is an out and out entertainer that will impress the audiences of all age groups. The film has been shot across the huge set backdrops of Haridwar in addition to some major portions filmed across Kerala’s thick forests, which includes the combination scenes of Sayaji Shinde’s character and other Aghori hermits.
The film will have top-notch Computer Generated graphic works, which will offer a tremendous visual treat for the audiences. Telugu actor Jakkulla babu, will be seen playing the antagonist in this movie. Shruthi Ramakrishnan is playing the female lead role in this film. It is worth mentioning that she has been honoured with Karnataka State Government for her best performances. She was earlier seen playing one of the lead roles in Tamil movie 144 as well. Mime Gopi, Siddhu, Darling Madhana Gopal, Riyamika, Madhavi, Vetri, Karthi, Kalakka Povadhu Yaaru fame Sarath and Designer Bhavan have played important roles.
Vasanth is handling cinematography, who has already gained good recognition for his works in movies like Ego, Kalla Thuppakki. Four Musics band – crew of four music directors is composing music for this film and they are one of the most leading musicians in Kerala. Ashok Kumar of Akshaya Studios, man behind the generation of astounding CG works in Ratsasan has worked on visual effects for this movie. Jayachandran is the art director.
The entire cast and crew of ‘Aghori’ is very much happy about their film’s censor board committee members passing U/A certificate have appreciated the film for its promising content and engaging package of entertainment ingredients. The film will have its theatrical release on December 15, 2023, and PVR Pictures is releasing it.
A Horror Thriller #AGHORI 👹☠️ Trailer Out Now
▶️https://youtu.be/H_AY_ePF0cc?si=Lhu08UnBluSGFnFP
Releasing on Dec 15th in Cinemas
Directed by D.S. Rajkumar
Produced by
Motion Film Picture INC
Suresh K.Menon
@SayajiShinde @sidhusid259 @mimegopi @Mrtmusicoff
TN Release @_PVRCinemas @PROSakthiSaran
தொலைக்காட்சித் தொடர்களின் நாயகன் சித்து அறிமுகமாகும் திரைப்படம் ‘அகோரி ‘
பிவிஆர் சினிமாஸ் வெளியிடும் ‘அகோரி’ திரைப்படம் டிசம்பர் 15 -ல் வெளியாகிறது !
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி’.
தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் இல்லம் தேடி மக்கள் மனதில் அமர்ந்திருக்கும் ஒரு நடிகராக வளர்ந்திருப்பவர் சித்து.இவர் நடித்த திருமணம், ராஜா ராணி போன்ற தொடர்கள் மிகவும் புகழ் பெற்றவை. இவர் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘அகோரி’.இதுவரை சின்னத்திரை மூலம் தனது திறமையை வெளிப்படுத்திய இவர், பெரிய திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ளதால், தான் அறிமுகம் ஆகியுள்ள இந்தப் படத்தைப் பெரிதும் நம்பி யிருக்கிறார்.
‘பாரதி’ படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது.இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.
மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .சிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.
இது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.
இப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும்
படமாக்கப்பட்டன.
படத்தில் இடம்பெறும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற ஜக்குல்லா பாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.இவர் ‘144’ பட நாயகியும் கூட.
இவர்களுடன் மைம் கோபி, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,கார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
அகோரி படத்துக்கு ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள். நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், ராட்சசன் படத்தின் CG டீமின் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார் இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.
ஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன்.
‘ அகோரி’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர்.
குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.
இப்படத்தைத் திரையரங்குகளில் PVR சினிமாஸ் வெளியிடுகிறது.பிரம்மாண்டமான பல வெற்றிப் படங்களை வெளியிட்ட பி விஆர் சினிமாஸ் இப்படத்தை வெளியிடுவதில் இருந்து படத்தின் நம்பகத்தன்மையும் வணிக மதிப்பும் அதிகரித்துள்ளன.