துாத்குக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால், மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சுழ்ந்து, மக்களின் இயல்பு வாழ்வைப் பாதித்து. இந்த நிலையில், வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் தொடர்ந்து மீட்புப்பணி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று (20/12/2023) ஏரல் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து படகில் பயணித்து,மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டு அறிந்தார். மேலும், வாக்கி டாக்கி மூலம் பிரச்சனையின் தீவிரத்தை அரசு அதிகாரிகளுக்கு உணர்த்தி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பால், பிஸ்கட், குழந்தைகளுக்கான பால் பவுடர் மற்றும் சமைக்க தேவைப்படும் அரசி,பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வேண்டும் என்று கோரினார். அதனைத் தொடர்ந்து, மீட்புப் படையினர் கனிமொழி எம்.பி கோரிய நிவாரண பொருட்களைப் படகில் கொண்டு சேர்த்தனர்.
பின்னர், கனிமொழி கருணாநிதி அவர்கள் மக்கள் கோரிய உணவு, தண்ணீர், பால் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி,வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஏரல் சுற்றியுள்ள கிராமங்களுக்கு டூவீலரில் சென்று நிவாரணப் பணியில் ஈடுபட்டார்.