ஐ இண்டர் நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல கராத்தே வீரர் இஷாக் உசைனி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்து, அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்துள்ள படம்தான் ” பூகம்பம் “.

இதில் இஷாக் உசைனி, தில்சானா, ஹேமா, ரிஷ்ஷத் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

தாமஸ் ரத்தினம் இசையையும், தயாள் ஓஷோ- – தேவராஜ் ஒளிப்பதிவையும், நவீன்குமார் படத்தொகுப்பையும்,
கமாண்டோ கே.பாபு – – பொன்னேரி புயல் டாக்டர் ஜோதி சண்டை பயிற்சியையும், என்.எம். இலியாஸ் இணை இயக்கத்தையும் , கவனிக்கின்றனர்.

உன்னை காதலித்து , உன்னை திருமணம் செய்வேன். உன் கருவை சுமப்பேன். ஆனால்
உன்னோடு வாழமாட்டேன் என கூறும் பெண் ஒரு புறம். தேர்தலில் சாம, தான, பேத, தண்டத்தை பயன்படுத்தி தேர்தலில் பெற்றி பெற்று பதவி பெற வெறியுடன். அலையும் அரசியல்வாதி மறுபுறம் வெளிநாட்டில் இருந்து வந்த நாயகன் இஷாக் உசைனி எடுக்கும் அதிரடி முடிவு என்ன என்பதே
” பூ க ம் ப ம் ” படத்தின் கருவாகும்.

ஐ இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கதை , திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, அதிரடி நாயகனாக நடித்து பூகம்பம் படத்தை இயக்கி உள்ளார் பிரபல தற்காப்புக்கலை நிபுணரான இஷாக் உசைனி படத்தை பற்றி ” பிச்சை எடுப்பதில் பல வகை உண்டு. இதில் தேர்தல் பிச்சையை பற்றி கூறி இருக்கிறேன். தமிழகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் குறிப்பாக போலந்து நாட்டில் அதிகமாக படப்பிடிப்பு நடத்தி இருக்கிறேன். “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தாலும் விட மாட்டேன்”னு சொல்லி வில்லனுக்கும் , நாயகிக்கும் இடையில் நாயகனாக நான் ஆடும் அதிரடி ஆக்சனுடன் தேர்தல் கிரைம் திரில்லராக இந்த படத்தை இயக்கி உள்ளேன்” என்று கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here