திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்களின் உதவி எண்ணிற்கு கடந்த (21/12/2023) மதியம் 3 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியிலிருந்து கர்ப்பிணிப் பெண் அபிஷாவை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் பிரசவ தேதியும் நெருங்கியது என்றும் அவரது குடும்ப உறுப்பினரிடம் இருந்து அழைப்பு வந்தது.

வெள்ள நீர் சூழ்ந்த பகுதியான கொற்கை ஊராட்சிக்கு, கனிமொழி கருணாநிதி அவர்களின் வாகனத்தை கர்ப்பிணிப் பெண் வீட்டிற்கு அனுப்பினார். மூன்றாம் தளத்திலிருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பத்திரமாக மீட்ட பின்னர் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவு (21/12/2023) 9 மணி அளவில் அபிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் தவித்த கர்ப்பிணிக்குப் பெண்ணிற்குக் கனிமொழி எம்.பி. உதவியதன் வாயிலாக சரியான நேரத்தில் மருத்துமனைக்கு செல்ல முடிந்தது. பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தானும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்.பி தான் காரணம் என்றும், அவருக்கு மிக்க நன்றி என்று அபிஷா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here