Here’s what the judges of Amazon Prime Video‘s COMICSTAAN SEMMA COMEDY PA, feel about what makes it special
Amazon Prime Video’s popular standup comedy format Comicstaan gets a Tamil adaptation after 2 successful seasons in Hindi.
Celebrated comedians such as Praveen Kumar, Karthik Kumar and Rajmohan will be mentoring and judging contestants over 8 episodes as they find the next best Tamil standup comedian
Amazon Prime Video recently released the trailer for Comicstaan Semma Comedy Pa, a much-awaited Tamil adaptation of audiences’ favorite Amazon Original Series Comicstaan. The launch of the series marks Prime Video’s foray into Original content in Tamil language. In the all-new series, we will see Tamil’s top three comedians Praveen Kumar, Karthik Kumar and Rajmohan Arumugam, experts in their respective genres of comedy, mentor selected contestants who will compete to become the king or queen of comedy in the Tamil stand-up scene.
Talking about what the judges feel is special and different about Tamil stand-up comedy, Karthik Kumar shares, “Picking up on what Comicstaan season 1 & 2 Hindi did was, largely to open a discussion on comedy. The audiences could discuss comedy rather than just enjoying it. Therefore, they became experts and are talking about why they like, what they like and picked participants and decided that I like this kind of comedy and I like that comedian. This, I think is damn interesting and that is what Comicstaan Semma Comedy Pa will do. It will educate people on what stand-up comedy actually is.”
Praveen Kumar also expresses, “I am honestly looking forward to this show to bring so many new talents on stage. It’s not just a platform that gives seasoned artists like me a platform, but also invites many more young talent…It will also identify talents from various regional backgrounds.”
Comicstaan Semma Comedy Pa is expected to bring forth the local flavour – borrowing from the unique nuances of Tamil culture, with exclusive sets performed by each of the participants. The trailer gives a sneak peek into an all-new edition where six of Tamil comedy’s best contestants will compete for the winning title of Comicstaan Semma Comedy Pa.
Mentored and judged by some of the most renowned Tamil standup comedians, Comicstaan Tamil features aspiring comedians competing to become the “future of funny” in Tamil stand-up comedy scene.
Produced by Only Much Louder (OML), Comicstaan Tamil has been directed by Arjun Karthikeyan and written by D. Jai Adhitya and Mervyn Rozario A are the writers of the series. Watch all episodes of Comicstaan Tamil starting 11th September, 2020 exclusively on Amazon Prime Video.
காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ஸ்பெஷல் என்ன? – நிகழ்ச்சியின் நடுவர்கள் தகவல்
அமேசான் ப்ரைம் வீடியோவின் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியை எது விசேஷமானதாக்குகிறது என நிகழ்ச்சியின் நடுவர்கள் கூறுகின்றனர்.
இந்தி மொழியில் வெற்றிகரமான சீஸன்களுக்குப் பிறகு, அமேசான் ப்ரைம் வீடியோவின் பிரபலமான ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சி காமிக்ஸ்தான், தமிழில் அறிமுகமாகிறது.
மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், ரசிகர்களுக்குப் பிடித்த, அமேசானின் அசல் தயாரிப்பான காமிக்ஸ்தான் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா நிகழ்ச்சியின் ட்ரெய்லர், சமீபத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தால் வெளியிடப்பட்டது.
ப்ரைம் வீடியோ, தமிழ் மொழியில் அசல் தயாரிப்புக்களை தொடங்கியிருப்பதற்கான முதல் படியே இந்த நிகழ்ச்சியின் அறிமுகம். இந்த புதிய நிகழ்ச்சியில், தமிழின் 3 முன்னணி நகைச்சுவையாளர்கள் பிரவீன் குமார், கார்த்திக் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆறுமுகம், தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள். மூவருமே அவரவர்க்கான நகைச்சுவை பாணியில் நிபுணர்களாக இருப்பவர்கள். இவர்கள் வழிகாட்டும் போட்டியாளர்கள் தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி மேடைகளின் ராஜாவாக அல்லது ராணியாகத் தேர்வாகப் போட்டியிடுவார்கள்.
தமிழ் ஸ்டான்ட் அப் காமெடியில் எது வித்தியாசமானது, விசேஷமானது என நிகழ்ச்சியின் நடுவர்கள் பகிர்ந்துள்ளனர். கார்த்திக் குமார் பேசுகையில்,
“நகைச்சுவைப் பற்றிய ஒரு வெளிப்படையான உரையாடலை ஆரம்பிக்க வேண்டும் என்பதே காமிக்ஸ்தான் இந்தி பதிப்பின் முதல் இரண்டு சீசன்களிலும் முக்கியமான நோக்கமாக இருந்தது. ரசிகர்கள் ஒரு நகைச்சுவையக் கேட்டு ரசிப்பதை விட அது பற்றி உரையாட முடிந்தது. எனவே அவர்கள் நிபுணர்களானார்கள். என்ன பிடித்தது, எதற்காகப் பிடித்தது என்பதைக் கூறி, போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து, எனக்கு இந்த மாதிரியான நகைச்சுவை பிடித்திருக்கிறது, இந்த நகைச்சுவையாளரப் பிடித்திருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார்கள்.
இது மிக சுவாரசியமான அம்சம் என நான் நினைக்கிறேன். இதைத்தான் காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா செய்யப் போகிறது. ஸ்டான்ட் அப் காமெடி என்றால் உண்மையில் என்ன என்று மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும்” என்றார்.
பிரவீன் குமார், “பல்வேறு புதிய திறமைகளை மேடைக்குக் கொண்டு வர, நான் இந்த நிகழ்ச்சிக்காக மிக ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். என்னைப் போன்ற அனுபவமுள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு தரும் தளமாக மட்டுமல்லாமல், நிறைய இளம் திறமைகளையும் அழைக்கிறது. பல்வேறு மாநிலப் பின்னணியில் இருக்கும் திறமைகளையும் இது அடையாளப்படுத்தும்”
காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா, தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவமான நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, நகைச்சுவையில் உள்ளூர் பாணியை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியாளரும் தனித்தனியாக தங்கள் திறமைகளைக் காட்டுவார்கள். ட்ரெய்லர், இந்த புதிய நிகழ்ச்சிக்கு ஒரு முன்னோட்டத்தைக் காட்டியுள்ளது. இதில் தமிழ் நகைச்சுவையின் சிறந்த ஆறு போட்டியாளர்கள், காமிக்ஸ்தான் செம்ம காமெடி பா சாம்பியன் பட்டத்துக்காகப் போட்டியிடவுள்ளனர்.
தமிழ் ஸ்டான்ட் அப் காமெடியில் மிகப் பிரபலமானவர்கள் வழிகாட்ட, நடுவராக இருக்க, காமிக்ஸ்தான் தமிழில், நகைச்சுவையில் சாதிக்க நினைக்கும் போட்டியாளர்கள், தமிழ் ஸ்டான்ட் அப் காமெடி சூழலின் எதிர்காலமாகத் திகழப் போட்டியிடுகின்றனர்.
ஒன்லி மச் லவுடர் தயாரிக்கும் காமிக்ஸ்தான் தமிழை, அர்ஜுன் கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ஜெய் ஆதித்யா, மெர்வின் ரொஸாரியோ ஆகியோர் எழுதியுள்ளனர். 11 செப்டம்பர் 2020ஆம் தேதி முதல், காமிக்ஸ்தான் தமிழின் அனைத்து பகுதிகளை, அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் கண்டு மகிழுங்கள்.