சேலத்தில் உள்ள பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை 6 ம் ஆண்டு துவக்கவிழாவில் பொங்கல் கலைவிழா விருது,தங்கத் தமிழர் விருது விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முனைவர். எஸ். கே. கிருஷ்ணன் (முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, தலைவர், அரசு திரைப்பட மாநிலகுழு, முனைவர் மா. ரா. செளந்தரராஜன் (உலக சாதனையாளர், எழுத்தாளர், சமூக மேம்பாட்டாளர்)மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.இவ்விருது விழாவில் தமிழ் இலக்கிய அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் சதீஷ் அவர்களின் தலைமையில், கல்லூரி நிறுவனத்தலைவர் சத்தியமூர்த்தி அவர்கள் வழிகாட்டுதலனுடனும், கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் தமிழகமெங்கும் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பட்டங்களும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் முனைவர் மா. ரா. செளந்தரராஜன் அவர்கள் பேசியதாவது கற்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக எனும் குறளுக்கு ஏற்ப… இன்றைய கால கட்டத்தில் கல்லூரியே நம்மளை தேடி கிராமங்களுக்கும் வந்து விட்டது. முன்பை விட சமுகத்தில் பெண்கள் அனைவரும் படிக்கின்றனர். ஓவ்வொருவருக்கும் ஓரு குறிக்கோள் லட்சியம் இருக்க வேண்டும். இவ்வாண்டு முதல் லட்சியத்தை முறையாக கடைபிடியுங்கள். பெற்றோர் சொல்வதை கேட்பது, ஆசிரியர் சொல்வதை காது கொடுத்து கேட்பது, வாழ்க்கையில் அடுத்த இலக்கு அரசு அதிகாரியாகவே, இந்திய அளவில் சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்களாக சிறந்து விளங்கவோ, நீங்கள் காவல்துறையில் சிறந்த அதிகாரியாகவோ கூட வரலாம். ஓவ்வொரு பிள்ளைக்கும் ஓரு கதை இருக்கும்.உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுங்கள். பிற்காலத்தில் உங்களைப் பார்த்து பலர் இன்ஸ்பிரேசன் கூட ஆகலாம். அதற்கான செயலை நோக்கி உறுதியோடு முன்னேறுங்கள் என்றார்.