கலைஞர் தொலைக்காட்சியில் “கெளரி” என்கிற புத்தம் புதிய தெய்வீக மெகாத்தொடரை ஒளிபரப்பாக இருக்கிறது.
அதன்படி, “கெளரி” வருகிற ஜனவரி 22 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
தொடரின் கதை மரையனூரில் வீற்றிருக்கும் மாசாணி அம்மனையும், தெய்வ கடாட்சம் நிறைந்த தெய்வீக குழந்தையான கௌரியையும் மையப்படுத்தி நகர்கிறது. தனது தாய் தந்தையை இழந்து சித்தி துர்காவுடன் வாழ்ந்து வருகிறாள் கௌரி .
சிவவல்லபா ஜமீன், ரத்ன குபேர ஜமீனை பழிவாங்க கௌரி பிறந்திருக்க, கௌரியை கொன்றால் தான் இந்த ஜமீன்களுக்கு விடிவு காலம் என இந்த ஜமீன்களின் குடும்ப ஜோதிடர் சொல்ல, கௌரியை கொல்லும் முயற்சியில் இறங்க, அதில் துர்கா சிக்கிக் கொள்கிறார். கடைசியில் கௌரி ஜமீன் குடும்பங்களை பழிதீர்த்தாளா? துர்காவின் வாழ்க்கை என்னவானது? என்பதே இந்த தொடரின் மீதிக்கதை.
இதில், கோவில் பூசாரியாக முருகனும், கௌரியாக சம்யுக்தாவும், “கெளரி”யின் தந்தையாக ராகவும், துர்காவாக நந்தினியும், மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் சதீஷ், அஞ்சு, மகேஷ், ஸ்வேதா, ரவி ராகுல், வெங்கடேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here