Chennai (January 25, 2024) – Actor Suriya launched the First Look of Air Flick Production’s upcoming film ‘Double Tukker’, starring Dheeraj as the lead character, and conveyed his best wishes and great success to the entire team.
Content-driven entertainers have always worked to garner heart-warming responses from critics and general audiences. In particular, Tamil film enthusiasts have never failed to spread out the red carpets for such movies as they appeal to the interests of audiences of all age groups. As the New Year has already offered such wonderful movies to Tamil audiences, actor Dheeraj starer “Double Tukker” will be the next one to join the league. The film, a laughter-riot action entertainer laced with fantasy elements, is directed by debut filmmaker Meera Mahadhi.
Actor Suriya has unveiled the film’s first look on his micro-blogging page and conveyed his best wishes to the entire team.
While actor Dheeraj plays the protagonist’s role, a couple of cute animated characters will be seen performing titular characters alongside him, which will be a first-of-its-kind cinematic experience for the audience. While Smruthi Venkat performs the female lead character, the film has an ensemble star-cast comprising Kovai Sarala, MS Bhaskar, Yashika Anand, Kaali Venkat, Munishkanth, Suniel Reddy, Sha Ra, and many other prominent actors.
Renowned Music Director Vidyasagar, known for his chartbuster hit albums, is composing the music for ‘Double Tukker’. The soundtrack promises to be a perfect blend of peppy, melodious, and youthful tunes. Gautham is in charge of cinematography, and Vetri is overseeing the editing process, with Sethu Ramalingam as the Executive Producer.
‘Double Tukker’ is being produced by Air Flick Production, with Chandru as the co-producer. The shooting of the film has already been completed, and the postproduction work is progressing rapidly. The Production House is planning a worldwide theatrical release for this Summer.
நடிகர் தீரஜின், ஃபேண்டஸி காமெடி, என்டர்டெயினரான ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா வெளியிட்டார்.
சென்னை (ஜனவரி 25, 2024)* – _நடிகர் சூர்யா, Air Flick Production நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் தீரஜின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டபுள் டக்கர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
சிறந்த கதைகள் கொண்ட தரமான படங்களுக்கு, விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடம் எப்போதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையிலான படங்களை, ரசிகர்கள் கொண்டாடத் தவறியதேயில்லை. இந்தப்புத்தாண்டு தமிழ் ரசிகர்களுக்கு, ஏற்கனவே இதுபோன்ற அற்புதமான திரைப்படங்களை வழங்கி வரும் நிலையில், நடிகர் தீரஜ் நடிப்பில் அடுத்ததாக “டபுள் டக்கர்” திரைப்படம், இந்த வரிசையில் இணைகிறது. ஃபேண்டஸி அம்சங்களுடன் வயிறு வலிக்க சிரித்து மகிழும்படியான பொழுதுபோக்கு திரைப்படமாக, இப்படத்தினை அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கியுள்ளார்.
முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ஒட்டுமொத்த குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் தீரஜ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், இரண்டு அழகான அனிமேஷன் கதாபாத்திரங்கள் அவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளது. இது பார்வையாளர்களுக்கு மிகப்புதுமையான சினிமா அனுபவமாக இருக்கும். நடிகை ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
சார்ட்பஸ்டர் ஹிட் ஆல்பங்களை தந்த பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகர், ‘டபுள் டக்கர்’ படத்திற்கு இசையமைக்கிறார். வித்யாசாகர் இசையில், மெல்லிசை மற்றும் இளமைத் துள்ளல்களின் சரியான கலவையாக பாடல்கள் இருக்கும் என்பது உறுதி. இப்படத்திற்கு கௌதம் ஒளிப்பதிவு செய்கிறார், வெற்றி எடிட்டிங் பணியை கவனிக்கிறார், சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
‘டபுள் டக்கர்’ படத்தை Air Flick Production நிறுவனம் தயாரிக்கிறது, சந்துரு இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தினை இந்த கோடையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.