Quantum Film Factory என்ற பட நிறுவனம் சார்பில் R. K. வித்யாதரன் மற்றும் K. மஞ்சு இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ” School “
இந்த படத்தில் பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாதிரத்தில் நடிக்கிறார்கள்.
மற்றும் பக்ஸ், சாம்ஸ் ஆகியோருடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிகவிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு : ஆதித்யா கோவிந்தராஜ்.
எடிட்டிங் : ராகவ் அர்ஸ்
கலை : விஜய் ஐயப்பன்
ஸ்கிரிப்ட் கன்சல்டண்ட் : V. நிவேதா
தயாரிப்பு மேற்பர்வை : கலை
உடைகள் : பாண்டியன்
மேக்கப் : சீனு
விளம்பர வடிவமைப்பு : சதீஷ் J
மக்கள் தொடர்பு : மணவை புவன்
தயாரிப்பு : R.K. வித்யாதரன், K. மஞ்சு
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குக்கிறார் R.K. வித்யாதரன்.
இது முழுக்க முழுக்க ஸ்கூலில் நடக்கும் கதை. ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்லவிருக்கிறோம்.
மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகி பாபுவும், ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே எஸ் ரவிக்குமாரும் principal ஆக பாக்ஸும் சாம்சும் நடிக்கிறார்கள்.
கன்னட திரை உலகில் உபேந்திரா வைத்து கனவில் நடக்கும் சம்பவங்களை Thriller-ஆக News திரைப்படத்திலும், வைத்தீஸ்வரன் திரைப்படத்தில் மறுஜன்மத்தை பற்றி ஆராயும் விதமாக சொல்லியது போல் இந்தப் படத்தில் சமூக நம்பிக்கைகளையும் ஆவிகள் உலகத்தில் நடக்கும் மன மாற்றங்களை பற்றி சொல்லவிருக்கிறார்.