குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தான் உலகம். இங்கு ஆரம்பக்கல்வி முதல் பத்தாவது படிக்கும் மாணவ மாணவிகள் உள்ளனர்.

எப்பவும் ஓரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். இந்த உலகத்தில் ஆண், பெண் / நல்லது, கெட்டது /இரவு, பகல் என எல்லாமே இரண்டாக இருக்கும். எதை எடுக்கனும் எதை விடனும் என்ற தெளிவு இருக்கனும்.

விழு, எழு, நில்லாதே உன் லட்சியப்பயணத்தை அடையும் வரை உறுதி கொள்ளுங்கள். உங்களுடைய Vision, Mind Thinking ரொம்ப முக்கியம்.

நான் கிராமத்தில் பிறந்தாலும் சிறுவயதில் ஆக்சிடென்ட் ஏற்பட்டாலும் நம்பிக்கை இழக்காமல் மன உறுதியோடு செயல்பட்டதால் தான் மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவில் சாதனை புரிந்தேன். ஓலிம்பிக்கில் கோல்டு மெடல் வாங்கினேன். ஏர்போர்ட்டில் கூட மத்திய அரசாங்கம் Protocol respect கொடுக்கிறார்கள். இந்த மாதிரியான தருணங்களில் கிராமத்திலிருந்து வந்த என்னால் பெற முடியும் போது நீங்களும் பெற முடியும் என்கிற நம்பிக்கையோடு உங்கள் கல்வியை வளர்த்துக்கனும்.

அம்மா அப்பா சொல்லை கேட்கனும். ஆசிரியர்களுடைய வார்த்தைகளை மதிக்கனும். இந்த வகையான பண்புகளை வளர்த்துக்கொள்ளும் போது உயர்வு, அங்கீகாரம் கிடைக்கும்.எப்பவும் Active ஆக இருங்கள். நாம் சிந்தனையோடு செயல்படனும். ஆகையால் இந்த நேரத்தில் உங்களையெல்லாம் வாழ்த்தி விடை பெறுகிறேன்.

ஆயிஷா மெட்ரிகுலேஷன் பள்ளியில் (Redhills) நடைபெற்ற 26வது பள்ளிஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். M. R. செளந்தரராஜன்(சமூக சிந்தனையாளர், சர்வதேச விளையாட்டு வீரர், எழுத்தாளர்),டாக்டர் எஸ். எம். பாதூர்,கமிஷனர் நந்தகுமார் (Income tax),மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here